Money Saving Tips: பணம் சேமிப்பது ரொம்ப ஈஸி... இந்த சூப்பர் ஃபார்முலா தெரிஞ்சா போதும்!
விமான வேகத்துல விலைவாசி ஏறுது, ஆனா அந்த வேகத்துல சம்பளம் ஏறல. இதனால செலவு அதிகமாகி, சேமிப்பு குறைஞ்சு போகுது. அவசரத்துக்கு கடன் வாங்க வேண்டிய நிலைமை கூட வருது. ஆனா, சரியா பிளான் பண்ணா பணத்தை சேமிக்கலாம். அதுக்கான 5 சூப்பர் டிப்ஸ் இதோ.
15

Image Credit : Getty
முன்னாடியே ஒரு பட்ஜெட் போடுங்க
நம்ம எல்லாருக்கும் சில அத்தியாவசிய செலவுகள் இருக்கும். ஆனா, சில செலவுகள் ஆசைக்காக பண்றது. அதனால, சம்பளம் வர்றதுக்கு முன்னாடியே ஒரு பட்ஜெட் போடுங்க. அவசியமான செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்க. சினிமா, ஷாப்பிங்னு தனி பட்ஜெட் வைங்க. முதல்ல சேமிப்பு, முதலீட்டுக்கு பணத்தை ஒதுக்கிட்டு, அப்புறம் மத்த செலவுகளைப் பாருங்க. மாச கடைசில மிச்சம் இருக்குறத சேமிக்கலாம்னு நினைக்காதீங்க. அது தப்பான பழக்கம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Getty
அவசர கால நிதியை தனியா எடுத்து வைங்க
பட்ஜெட் போடும்போதே, அதுல இருந்து அவசர கால நிதியை (Emergency Fund) தனியா எடுத்து வைங்க. இந்த பணத்தை நீங்க அதிகமா பயன்படுத்தாத ஒரு பேங்க் அக்கவுன்ட்ல போடுங்க. திடீர் மருத்துவச் செலவு, வேலை இழப்பு மாதிரி எதிர்பாராத நேரங்கள்ல இந்த நிதி உங்களுக்கு கை கொடுக்கும். இதை ஒரு கட்டாயமான விஷயமா நினைச்சு பண்ணுங்க.
35
Image Credit : Getty
கூடுதல் வருமானத்தை சேமிக்கவும்
சம்பளத்தைத் தவிர வர்ற இன்சென்டிவ், போனஸ் எல்லாம் நமக்கு கூடுதல் வருமானம். இந்த பணத்தை செலவு பண்ணாம, உங்க சேமிப்புக் கணக்குல போட்டுடுங்க. இப்படி செஞ்சா, உங்க சேமிப்பு இலக்கை ஈஸியா அடைய முடியும்.
45
Image Credit : google
தேவையில்லாம செலவு செஞ்சா, சேமிப்பு பாதிக்கும்
ஸ்மார்ட்போன் வந்த பிறகு, ஷாப்பிங் ஆஃபர் நோட்டிஃபிகேஷன் அடிக்கடி வரும். உண்மையிலேயே தேவை இல்லைனா, ஷாப்பிங் பண்றதையோ, வெளியில சாப்பிடுறதையோ தவிர்த்திடுங்க. ஏன்னா, அந்த நோட்டிஃபிகேஷனைப் பார்த்து தேவையில்லாம செலவு செஞ்சா, சேமிப்பு பாதிக்கும். பிற்காலத்துல நிதிப் பற்றாக்குறை ஏற்படலாம்.
55
Image Credit : Asianet News
நிதி ஆலோசகர்களோட உதவியை நாடலாம்
பணம் சேமிக்கிறதுக்குன்னு ஒரு நிலையான ஃபார்முலா கிடையாது. உங்க சம்பளத்துல எவ்வளவு சேமிக்கணும்னு நீங்கதான் முடிவு பண்ணனும். இது உங்க நிதி இலக்குகளைப் பொறுத்தது. இதுக்கு நீங்க நிதி ஆலோசகர்களோட உதவியை நாடலாம். அவங்க உங்க சம்பளம், சம்பள உயர்வு, விலைவாசி உயர்வு எல்லாத்தையும் கணக்குல வச்சு, உங்களுக்காக ஒரு நல்ல பிளான் போட்டுத் தருவாங்க. அது உங்க சேமிப்புக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
Latest Videos

