MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Salary Savings Tricks: சம்பளம் வந்ததும் அக்கவுன்ட் காலி ஆகுதா? இந்த 5 ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க! நீங்களும் கோடீஸ்வரன்.!

Salary Savings Tricks: சம்பளம் வந்ததும் அக்கவுன்ட் காலி ஆகுதா? இந்த 5 ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க! நீங்களும் கோடீஸ்வரன்.!

மாசாமாசம் சம்பளம் வந்த சில மணிநேரத்துல அக்கவுன்ட்ல இருந்த பணம் எல்லாம் எங்க போகுதுன்னே தெரியலையா? EMI, வாடகை, கரண்ட் பில், ஆன்லைன் ஷாப்பிங்னு பட்ஜெட் எகிறிடுதா? அப்போ இந்த 5 சிம்பிள் டிப்ஸ் உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 27 2026, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
முதலில் உங்களுக்கு நீங்களே பணம் செலுத்துங்கள்
Image Credit : Getty

முதலில் உங்களுக்கு நீங்களே பணம் செலுத்துங்கள்

மாதம் லட்சம் ரூபாய் சம்பாதித்தால் கூட பெரும்பாலானோருக்கு சேமிப்பு என்பது எட்டா கனியாகவே இருக்கும். நிறைய பேர் முதலில் செலவு செய்துவிட்டு, மீதி இருந்தால் சேமிப்பார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். சம்பளம் வந்ததும், அதில் 10-20% தொகையை தனியாக ஒரு சேமிப்புக் கணக்கிற்கு மாற்றிவிடுங்கள் என்பதே அவர்களது அறிவுரை. உங்கள் சம்பளம் ₹50,000 என்றால், ₹5,000 முதல் ₹10,000 வரை உடனடியாக எடுத்து வைத்துவிடுங்கள். கண்ணை விட்டு மறைந்தால், செலவில் இருந்தும் மறைந்துவிடும் என்பது ஒரு நல்ல ஃபார்முலா. இந்த பார்முலா உங்களை வாழ்வில் உயர்த்தும்.

25
சுலபமான பட்ஜெட் பார்முலா இதுதான்.!
Image Credit : Gemini

சுலபமான பட்ஜெட் பார்முலா இதுதான்.!

எல்லாவற்றுக்கும் ஸ்மார்ட் வழி இருக்கு அதை தெரிஞ்சுகிட்டா நீங்களும் கோடீஸ்வரன்தான். இது ஒரு சுலபமான பட்ஜெட் ஃபார்முலா. நிதி நிபுணர்கள் பலரும் இதைப் பரிந்துரைக்கின்றனர். உங்கள் வருமானத்தில் 50% வீட்டு வாடகை, மளிகை, பில்கள் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், 30% ஷாப்பிங், சுற்றுலா போன்ற லைஃப்ஸ்டைல் செலவுகளுக்கும், மீதமுள்ள 20% சேமிப்புக்கும் ஒதுக்க வேண்டும். இப்படிச் செய்தால், உங்கள் பணம் எங்கே அதிகம் செல்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். ஒரு மாதம் இதைக் கடைப்பிடித்தாலே வித்தியாசம் தெரியும்.

Related Articles

Related image1
இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது
Related image2
ரூ.20,000 வரை சேமிப்பு.. ஒரு சார்ஜில் 123கிமீ ரேஞ்ச் தரும் ஏதர் ஸ்கூட்டர்
35
சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் EMI-களை சரிபாருங்கள்
Image Credit : Getty

சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் EMI-களை சரிபாருங்கள்

Netflix, Amazon, மியூசிக் ஆப்ஸ், கிரெடிட் கார்டு EMI என மாதாமாதம் போகும் சின்ன சின்ன தொகைகள் சேர்ந்து பெரிய செலவாக மாறும். ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை, உங்கள் 'பண வரவு-செலவு சரிபார்ப்பு நாளை' வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத 2-3 சப்ஸ்கிரிப்ஷன்களை ரத்து செய்தாலே, நீங்களும் ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும் என்தே உண்மை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

45
24 மணிநேர ஷாப்பிங் விதி
Image Credit : Gemini

24 மணிநேர ஷாப்பிங் விதி

கடைக்கு போறீங்களா? அப்ப இதனை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க. அத்தியாவசியமில்லாத ஒரு பொருளை வாங்குவதற்கு முன், குறைந்தது 24 மணிநேரம் காத்திருக்க வேண்டியது அவசியம். அந்த நேரத்தில் அவசியமாகத் தோன்றும் பல விஷயங்கள், அடுத்த நாள் அவ்வளவு முக்கியமாகத் தெரியாது என்பதே உண்மை. இந்த ஒரு சின்ன பழக்கம், மாதத்திற்கு ₹3,000 முதல் ₹5,000 வரை மிச்சப்படுத்த உதவும்.

55
அவசரகால நிதியை உருவாக்குங்கள்
Image Credit : Getty

அவசரகால நிதியை உருவாக்குங்கள்

சட்டென வரும் செலவுக்கு பணம் ரெடி செய்வதுதான்  நடுத்தர மக்களுக்கு இருக்கிற சவால் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். திடீர் மருத்துவச் செலவு, வேலை இழப்பு அல்லது எதிர்பாராத பெரிய செலவு உங்கள் பட்ஜெட்டை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிடும். அதனால், ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து, உங்கள் 3 மாதச் செலவுகளுக்குச் சமமான ஒரு அவசரகால நிதியை உருவாக்குவது அவசியம். 

இப்படி ஒரு பேக்கப் இருந்தால், கடன் வாங்கும் நிலை வராது; நிதிச் சிக்கல்களும் ஏற்படாது. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான நிதித் தகவல் மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே. இதில் உள்ள டிப்ஸ் பொதுவான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு முதலீடு, சேமிப்புத் திட்டம் அல்லது நிதி முடிவை எடுப்பதற்கு முன், உங்கள் வருமானம், செலவு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனை மதிப்பிடுங்கள். 

நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டத்தையோ, வங்கியையோ அல்லது நிதி நிறுவனத்தையோ பரிந்துரைக்கவில்லை. நிதி முடிவுகளை எடுக்கும் முன், சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
விலை ஏறுனா என்ன..? ஸ்மார்ட்டா யோசிங்க..! பெட்ரோலில் பணத்தை மிச்சப்படுத்தும் 5 வழிகள்
Recommended image2
DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்
Recommended image3
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!
Related Stories
Recommended image1
இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது
Recommended image2
ரூ.20,000 வரை சேமிப்பு.. ஒரு சார்ஜில் 123கிமீ ரேஞ்ச் தரும் ஏதர் ஸ்கூட்டர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved