MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது

இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது

இயக்கச் செலவுகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால், இண்டிகோ நிறுவனம் விமான டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அந்நியச் செலாவணி மாற்றங்களும் இந்த உயர்வுக்கு காரணமாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 25 2026, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இண்டிகோ டிக்கெட் விலை
Image Credit : ANI

இண்டிகோ டிக்கெட் விலை

நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணங்களை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது. இந்த மாற்றம் பயணிகளின் எண்ணிக்கையை பாதிக்கக்கூடும் என்ற கவலையும் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்தது, சில விமான சேவைகளில் ஏற்பட்ட தடங்கல்களும் இந்த முடிவிற்கு காரணமாக உள்ளன.

25
விமான கட்டணம் உயர்வு
Image Credit : X

விமான கட்டணம் உயர்வு

செலவுகளை சமாளிக்க, இண்டிகோ நிறுவனம் ஏற்கனவே எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயண தூரத்தைப் பொறுத்து ரூ.425 முதல் ரூ.2,300 வரை இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விமான சேவைகளின் மொத்த இயக்கச் செலவில் சுமார் 40% எரிபொருளுக்கே செலவாகிறது. இதனால், எரிபொருள் விலை உயர்வு நேரடியாக டிக்கெட் கட்டணங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Related Articles

Related image1
ரூ.5,000 கடன்.. பேங்க் ஆப் பரோடாவின் புதிய திட்டம்.. பெண்களுக்கு சூப்பர் நியூஸ்
Related image2
ரூ.15 லட்சம் வரை அரியர்ஸ்.? பெரிய சம்பள உயர்வு வரப்போகுது! 8வது ஊதியக் குழு அப்டேட்
35
எரிபொருள் கூடுதல் கட்டணம்
Image Credit : X

எரிபொருள் கூடுதல் கட்டணம்

இதற்கு கூடுதலாக, அந்நியச் செலாவணி மாற்றங்களும் விமான நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளன. பல செலவுகள் வெளிநாட்டு நாணயத்தில் இருப்பதால், ரூபாயின் மதிப்பு குறையும்போது நிறுவனத்தின் செலவுகள் மேலும் அதிகரிக்கின்றன. இந்த காரணங்களால், எதிர்காலத்தில் டிக்கெட் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

45
உள்நாட்டு விமான டிக்கெட்
Image Credit : stockPhoto

உள்நாட்டு விமான டிக்கெட்

இந்நிலையில், உள்நாட்டு விமான டிக்கெட்டுகளுக்கான அரசின் கட்டண வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் சந்தை தேவைக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கலாம். முன்பு, ஒருவழி ஏகானமி டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக ரூ.18,000 வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், தேவையில்லாமல் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

55
பங்குச் சந்தையில் இண்டிகோ
Image Credit : stockPhoto

பங்குச் சந்தையில் இண்டிகோ

இந்த செய்திகளின் பின்னணியிலும், பங்குச் சந்தையில் இண்டிகோ பங்கு சிறிய அளவில் உயர்வைக் கண்டது. ஒரு நாளில் சுமார் 1.91% உயர்ந்தாலும், கடந்த ஒரு மாதத்தில் 14% மேல் சரிவு, ஒரு வருடத்தில் சுமார் 15% குறையும் பதிவாகியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இண்டிகோ விமானம்
வானூர்திப் பயணங்கள்
இந்தியா
விலைவாசி
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.5,000 கடன்.. பேங்க் ஆப் பரோடாவின் புதிய திட்டம்.. பெண்களுக்கு சூப்பர் நியூஸ்
Recommended image2
Energy Lockdown: ஈரான் போரால் உலகத்துக்கு புது சிக்கல்? 'எனர்ஜி லாக்டவுன்'னா என்ன தெரியுமா?
Recommended image3
Business Ideas for Women: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? இதோ பெண்களுக்கான 10 'லோ-ரிஸ்க்' பிசினஸ் ஐடியாக்கள்
Related Stories
Recommended image1
ரூ.5,000 கடன்.. பேங்க் ஆப் பரோடாவின் புதிய திட்டம்.. பெண்களுக்கு சூப்பர் நியூஸ்
Recommended image2
ரூ.15 லட்சம் வரை அரியர்ஸ்.? பெரிய சம்பள உயர்வு வரப்போகுது! 8வது ஊதியக் குழு அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved