- Home
- Business
- Investment Plan: வேலை கிடைத்தவுடன் முதலீடு வேண்டாம்.! வருமானத்தை பல மடங்காக உயர்த்த இதை மட்டும் செஞ்சா போதும்!
Investment Plan: வேலை கிடைத்தவுடன் முதலீடு வேண்டாம்.! வருமானத்தை பல மடங்காக உயர்த்த இதை மட்டும் செஞ்சா போதும்!
குறைந்த வருமானம் ஈட்டும் இளைஞர்களுக்கு, முதல் ஐந்து ஆண்டுகளில் SIP அல்லது FD-யை விட தங்களை மேம்படுத்திக்கொள்வது அதிக லாபம் தரும். இது உங்கள் சந்தை மதிப்பை அதிகரித்து, எதிர்காலத்தில் அதிக சம்பள உயர்வு மற்றும் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும்.

முதலில் இதனை கவனிக்கவும்
வேலை கிடைத்தவுடனே SIP அல்லது FD தொடங்குவது சிறந்த நிதி முடிவு என பலர் நம்புகின்றனர். ஆனால், இது அனைவருக்கும் பொருந்தாது, குறிப்பாக குறைந்த சம்பளத்தில் தொடங்கும் இளைஞர்களுக்கு. குறைந்த வருமானத்தில் சேமிப்பும் குறைவாகவே இருக்கும்.
இதுதான் சரியான வழியாக இருக்கும்
முதல் ஐந்து ஆண்டுகளை உங்கள் 'திறன் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு' அர்ப்பணிக்கவும். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, தொழில்முறை படிப்புகள், நெட்வொர்க்கிங் போன்றவற்றில் முதலீடு செய்வது உங்கள் சந்தை மதிப்பை அதிகரித்து சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும்.
கூட்டு வட்டி மிகவும் குறைவாகவே இருக்கும்
ஆரம்ப சம்பளம் குறைவாக இருக்கும்போது, பெரும் பகுதி வாடகை, உணவு போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு போய்விடும். இதனால் மாத சேமிப்பு ₹1,000 முதல் ₹5,000 வரை மட்டுமே இருக்கும். இந்த சிறிய தொகையில் கூட்டு வட்டியின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருக்கும்.
விரைவான முதலீடு அனைவருக்கும் பொருந்தாது
எனவே, 'விரைவான முதலீடு' என்ற அறிவுரை அனைவருக்கும் பொருந்தாது. திறன் மேம்பாட்டில் முதலீடு செய்தால், வருமானம் பன்மடங்கு அதிகரித்து, முதலீட்டு வாய்ப்புகள் பெருகும். மாதம் ₹5,000 SIP-ல் 5 ஆண்டுகளில் சுமார் ₹4.6 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

