FD வட்டி கம்மி ஆயிடுச்சு! ஆனா இந்த பேங்க்ல போட்டா இன்னும் நல்ல லாபம் பார்க்கலாம்!
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் சரிந்துள்ளன. 2026-ல் முன்னணி வங்கிகளின் 5 ஆண்டு டெபாசிட் வட்டி விகிதங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கு சில வங்கிகள் 7% மேல் வட்டி வழங்குகின்றன.

பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஆண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைத்ததால், வங்கிக் கடன்களுக்கான வட்டி குறைந்தாலும், பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்கள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளன.
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முன்னணி வங்கிகள் 5 ஆண்டு கால டெபாசிட்டுகளுக்கு வழங்கும் வட்டி விவரங்களைப் பார்ப்போம்.
பொதுத்துறை வங்களில் 5 ஆண்டு டெபாசிட்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI): நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் பொதுவானவர்களுக்கு 6.05% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.05% வட்டியும் வழங்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB): பிஎன்பி வங்கியில் பொதுமக்களுக்கு 6.00% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.80% வட்டியும் வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் பரோடா: இவ்வங்கியில் பொதுமக்களுக்கு 6.00% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு சரியாக 7.00% வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னணி தனியார் வங்கிகள்
ஹெச்டிஎப்சி வங்கி (HDFC): முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யில் பொதுவானவர்களுக்கு 6.15% வட்டி கிடைக்கிறது. ஆனால், மூத்த குடிமக்களுக்கு மற்ற வங்கிகளை விடக் குறைவாக 6.65% மட்டுமே வழங்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி (ICICI): இந்த ஒப்பீட்டில் மற்ற வங்கிகளை விட ஐசிஐசிஐ வங்கி அதிக வட்டி வழங்குகிறது. பொதுவானவர்களுக்கு 6.60% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.10% வட்டியும் கிடைக்கிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
2026-இல் வட்டி விகிதங்கள் குறைந்திருந்தாலும், ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு இன்னமும் 7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிக வட்டி தரும் வங்கிகளைத் தேடும் அதே வேளையில், வங்கியின் பாதுகாப்பு மற்றும் ரிசர்வ் வங்கியின் காப்பீட்டுத் திட்டமான DICGC வரம்புகளைச் சரிபார்த்து முதலீடு செய்வது உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பானது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

