- Home
- Business
- இனி அமேசானில் FD கட்டலாம்! பெண்களுக்கு எக்ஸ்ட்ரா வட்டி.. வெறும் 1000 ரூபாய் இருந்தா போதும்!
இனி அமேசானில் FD கட்டலாம்! பெண்களுக்கு எக்ஸ்ட்ரா வட்டி.. வெறும் 1000 ரூபாய் இருந்தா போதும்!
ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் பே, இப்போது தனது செயலியில் பிக்சட் டெபாசிட் (FD) முதலீட்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து, வாடிக்கையாளர்கள் 8% வரை வட்டி பெறும் வாய்ப்பை இது வழங்குகிறது.

அமேசானில் பிக்சட் டெபாசிட்
ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பணம் செலுத்துவதற்குப் பெயர்போன அமேசான் பே (Amazon Pay), இப்போது முதலீட்டுத் துறையிலும் கால்பதித்துள்ளது. தனது வாடிக்கையாளர்கள் அமேசான் ஆப் மூலமாகவே நேரடியாக நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit - FD) திட்டங்களில் முதலீடு செய்யும் புதிய வசதியைத் தொடங்கியுள்ளது.
யாருடன் கூட்டணி?
அமேசான் பே இந்தச் சேவையை வழங்க 5 வங்கிகள் மற்றும் 2 நிதி நிறுவனங்களுடன் (NBFC) ஒப்பந்தம் செய்துள்ளது.
சவுத் இந்தியன் வங்கி, ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஸ்லைஸ் (Slice) ஆகிய வங்கிகள் இதில் இணைந்துள்ளன.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிதி நிறுவனங்களும் அமேசானுடன் கைகோர்த்துள்ளன.
8% வரை வட்டி
ஆண்டுக்கு அதிகபட்சமாக 8% வரை வட்டி வழங்கப்படுகிறது. 'ஸ்ரீராம் ஃபைனான்ஸ்' மூலம் முதலீடு செய்யும் பெண்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி வழங்கப்படும்.
வெறும் ரூ. 1,000 முதல் நீங்கள் முதலீட்டைத் தொடங்கலாம். இந்த எஃப்.டி (FD) திட்டங்களில் சேர அந்தந்த வங்கிகளில் நீங்கள் தனியாகச் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் DICGC அமைப்பின் மூலம் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு உண்டு. இந்த காப்பீடு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும், நிதி நிறுவனங்களுக்குப் பொருந்தாது.
விண்ணப்பிப்பது எப்படி?
முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில், எந்தவித காகிதப் பணிகளும் இன்றி எளிதாக விண்ணப்பிக்கலாம்:
1. உங்கள் அமேசான் ஆப்பைத் திறந்து Amazon Pay பகுதிக்குச் செல்லவும்.
2. அங்குள்ள 'Fixed Deposit' ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. விருப்பமான வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத் தேர்வு செய்து, வட்டி விகிதங்களை ஒப்பிடவும்.
4. முதலீட்டுத் தொகை மற்றும் கால அளவைத் தேர்வு செய்து, தேவையான விவரங்களைப் பதிவிட்டு முதலீட்டை முடிக்கலாம்.
அமேசான் பே பணம் செலுத்துவது போலவே, இப்போது எளிமையாக சேமிக்கும் வசதியையும் வழங்குகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

