அடேங்கப்பா!! ஒரு ரயிலை உருவாக்க இத்தனை கோடி செலவாகுதா!! பலரும் அறியாத சுவாரசியமான தகவல்!!
ஒரு ரயிலை தயாரிக்க எத்தனை கோடி செலவாகும், ரயில் உற்பத்தியில் என்னென்ன விஷயங்கள் உள்ளன என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள்...
ரயிலில் பயணம் செய்வது தான் இந்தியாவில் பலரின் பட்ஜெட்டை காப்பாற்றி வருகிறது. மலிவான ரயில் பயணங்களுக்கு பின்னால் எத்தனை கோடி முதலீடு உள்ளது தெரியுமா? அதாவது எத்தனை கோடி செலவில் ஒரு ரயிலை தயாரிப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். ரயிலில் உள்ள எஞ்சின் விலை தான் மிகவும் அதிகம்.
நம்முடைய இந்திய ரயில்களை பொறுத்தவரை அதில் இருவகையான என்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. ஒருவகை மின்சார ரயில்களுக்கானது. மற்றொரு வகை டீசல் என்ஜின்களுடையது. இன்றைய நிலவரப்படி, ஒரு ரயில் என்ஜின் தயாரிக்கவே கிட்டத்தட்ட 13 முதல் 20 கோடி ரூபாய் செலவாகுமாம். இந்த விலை தரம், இயந்திரத்தின் சக்தியை பொறுத்து மாறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
எஞ்ஜின் விலையே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரும் என்ற நிலையில், இந்திய ரயில்வே கோச் ஒன்றிற்கு எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? அதற்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவாகும் என தகவல்கள் கூறுகின்றன. மொத்தமாக ஒரு ரயிலை உருவாக்க வேண்டுமென்றால் ரூ.66 கோடி வரை செலவாகும் என தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: வீட்டில் கண்ணாடி உடைந்தால் நல்லதா? கெட்டதா? உண்மை என்னனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!!
சென்னை போன்ற நகரங்களில் பயன்படுத்தப்படும் பயணிகள் ரயில் ஒன்றில் சுமார் 24 பெட்டிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியும் ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்படும் என்ற கணக்கில் பார்த்தால், மொத்த விலையாக 48 கோடி ரூபாய் வரும். இத்துடன் ரயில் என்ஜின் விலை ஏற்கனவே பார்த்தது போல் 16 முதல் 20 கோடி ரூபாய் வரை உள்ளது. நீங்களே கணக்கு போட்டு பாருங்களேன். கூடுதல் தகவல்களாக இன்னொன்று தெரிந்து கொள்ளுங்கள். நம் நாட்டில் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 115 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இலவச கார், பங்களா! வசதிகளை வாரி கொடுக்கும் கிராமம்.. இது எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?