அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. கையில் எவ்வளவு கிடைக்கும்?
எட்டாவது ஊதியக் குழுவின் (8th Pay Commission) பரிந்துரைகளின்படி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு உயர்த்தப்படும் என்பது குறித்து தேசிய கவுன்சில்-ஜாயிண்ட் கன்சல்டேடிவ் மெஷினரியின் பணியாளர் பிரிவு தலைவர் எம். ராகவய்யா விளக்கமளித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. கையில் எவ்வளவு கிடைக்கும்?
அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பள உயர்வுக்கு 2 ஃபிட்மென்ட் பேக்டரை எதிர்பார்க்கிறோம் என்று கூறுகிறார்கள். சம்பள திருத்தம் 'ஃபிட்மென்ட் காரணி'யைப் பொறுத்தது.
ஏழாவது ஊதியக் குழு
எடுத்துக்காட்டாக, ஏழாவது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் பேக்டர் 2.57 ஆகும். ஆறாவது ஊதியக் குழுவின் கீழ், நிலை 1 இல் உள்ள அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது.
அகவிலைப்படி உயர்வு
அகவிலைப்படி (டிஏ), வீட்டு வாடகைப்படி (எச்ஆர்ஏ) மற்றும் போக்குவரத்துப்படி தவிர, பிற சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளைச் சேர்த்து நிலை 1 ஊழியர்களின் மொத்த குறைந்தபட்ச சம்பளம் ரூ.36,020.
எச்ஆர்ஏ
எட்டாவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் பேக்டர் 2.86 ஆக இருக்க வேண்டும். ஃபிட்மென்ட் காரணி 2.86 எனில், நிலை 1 இல் அடிப்படை சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.51,480 ஆக உயர்த்தப்படலாம்.
எட்டாவது ஊதியக் குழு
இதில் அலுவலக உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் உள்ளனர். ஆனால் சமீபத்திய அறிக்கையில் ஒரு விஷயம் தெளிவாகியுள்ளது, இவ்வளவு சம்பள உயர்வு இருக்காது.
ஃபிட்மென்ட் பேக்டர்
தேசிய கவுன்சில்-ஜாயிண்ட் கன்சல்டேடிவ் மெஷினரியின் பணியாளர் பிரிவு தலைவர் எம். ராகவய்யா கூறுகையில், “குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.36,000 ஆக உயர்த்துமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
அரசு ஊழியர்கள்
அதாவது, 2.86 அல்ல, மாறாக 2.0 ஃபிட்மென்ட் பேக்டரை அனைத்து அரசு ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர். அறிக்கையின்படி, ஃபிட்மென்ட் பேக்டர் 2.0 எனில், நிலை 2 இல் உள்ள எழுத்தர் நிலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.19,900ல் இருந்து ரூ.39,800 ஆக உயர்த்தப்படலாம்.
குறைந்தபட்ச சம்பளம்
நிலை 3 இல் உள்ள அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு? அடிப்படை சம்பளம் ரூ.21,700ல் இருந்து ரூ.43,400 ஆக உயர்த்தப்படலாம். நிலை 4 இல் உள்ள கிரேடு டி ஸ்டெனோகிராஃபர்கள் மற்றும் ஜூனியர் எழுத்தர்களின் சம்பளம் ரூ.25,500ல் இருந்து ரூ.51,000 ஆக உயர்த்தப்படலாம்.
அடிப்படை சம்பளம்
நிலை 5 இல் சீனியர் எழுத்தர்கள் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.29,200ல் இருந்து ரூ.58,400 ஆக உயர்த்தப்படலாம். நிலை 6 இல் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளின் அடிப்படை சம்பளம் ரூ.70,800 ஆக உயர்த்தப்படலாம்.
8வது ஊதியக்குழு அப்டேட்
நிலை 7 இல் சூப்பிரண்டென்ட், பிரிவு அதிகாரி மற்றும் உதவி பொறியாளர்களின் அடிப்படை சம்பளம் ரூ.89,800 ஆக உயர்த்தப்படலாம். நிலை 8 இல் சீனியர் பிரிவு அதிகாரி மற்றும் உதவி தணிக்கை அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பளம் ரூ.47,600ல் இருந்து ரூ.95,200 ஆக உயர்த்தப்படலாம்.
சம்பள உயர்வு
நிலை 9 இல் துணை சூப்பிரண்டென்ட் மற்றும் கணக்கு அதிகாரிகளின் அடிப்படை சம்பளம் ரூ.53,100ல் இருந்து ரூ.1,06,200 ஆக உயர்த்தப்படலாம். குரூப் ஏ அதிகாரிகள் போன்ற சிவில் சர்வீஸ் நுழைவு நிலை அதிகாரிகளின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,100ல் இருந்து ரூ.1,12,200 ஆக உயர்த்தப்படலாம்.
மே 5 முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.