ரிலையன்ஸ் அம்பானிக்கு ஆப்பு..! இந்தியாவில் கால் பதித்த எலன்மாஸ்கின் ஸ்டார்லிங்க்.!
எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவை, மகாராஷ்டிரா அரசுடன் இணைந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நுழைகிறது. 2026-ல் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய டிஜிட்டல் சந்தையில் பெரும் மாற்றம் நிகழவுள்ளது.

எலன் மஸ்க் போட்ட அதிரடி கையெழுத்து.!
இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாதையில் புதிய அத்தியாயமாக திகழ்கிறார் தொழில்நுட்ப தாதாவான எலன் மஸ்க். இவரின் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் (Starlink) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு மற்றும் ஸ்டார்லிங்க் இணைந்து ஒரு Letters of Intent (LOI) க்கு கையொப்பமிட்டுள்ளன. இதன் மூலம் தொலைதூர கிராமப் பகுதிகளுக்கு வேகமான இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
என்ன செய்யப்போகிறது ஸ்டார்லிங்க்?
மலைகள், காடுகள், கடற்கரைப் பகுதிகள் போன்ற இடங்களில் இணையம் கிடைக்காத சிக்கலை தீர்க்கும் வகையில், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் மூலம் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் வழங்கும். முதல் கட்டமாக தொலைதூர பள்ளிகளை இணைக்கும் பைலட் திட்டம் தொடங்கப் போகிறது. பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், கடல் தீபகற்ப கண்காணிப்பு ஆகியவற்றிலும் ஸ்டார்லிங்கின் உதவி பெருகும்.
மும்பையில் டெமோ – மக்கள் மகிழ்ச்சி
மும்பையில் நடைபெற்ற டெமோவில் ஸ்டார்லிங்கின் வேகமும், தரமும் பாராட்டைப் பெற்றது. இதன் மூலம், நாட்டில் எங்கும் இணையம் கிடைக்கக் கூடிய ஒரு எதிர்கால கனவு நிஜமாகும் என நம்பிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் சேவை எப்போது?
சேவை 2026 தொடக்கத்தில் முறையாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க அங்கீகாரங்களும், உபகரண நிறுவல்களும் நீடிக்கின்றன.
ரிலையன்ஸ், ஜியோக்கு போட்டி!
இதுவரை இந்தியாவின் இணையத்துறை சந்தையை ரிலையன்ஸ் ஜியோ ஆக்கிரமித்திருந்தாலும், ஸ்டார்லிங்க் வருகையால் 3000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வாயிலாக இணைய சேவை கிடைக்கப்போகிறது. இது ஜியோவுக்கு ஒரு நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது. எலன் மஸ்கின் கனவு பூமியின் ஒவ்வொரு மூலையிலும் இணையம் என்பதாகும் அது இப்போது இந்திய நிலத்திலும் கால்வைத்து விட்டது. இந்திய டிஜிட்டல் மார்க்கெட்டில் அடுத்த அரசர் யார்? மஸ்க்-ஆ, அம்பானி-ஆ? காத்திருக்கிறது இந்தியா!