MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Elon Musk: உலகின் முதல் ட்ரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்; இவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Elon Musk: உலகின் முதல் ட்ரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்; இவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Elon Musk: ஒரே நாளில் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து மதிப்பு உயர்ந்ததால், உலகின் முதல் ட்ரில்லியனர் என்ற புதிய வரலாற்றை எலான் மஸ்க் படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 14 2026, 10:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புதிய வரலாறு படைத்த எலான் மாஸ்க்
Image Credit : X

புதிய வரலாறு படைத்த எலான் மாஸ்க்

உலகின் மிகப்பெரிய பணக்காரராக ஏற்கனவே அறியப்பட்ட எலான் மாஸ்க், தற்போது நிதி வரலாற்றில் இதுவரை யாரும் எட்டாத புதிய உச்சத்தை அடைந்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐபிஓ வெற்றியைத் தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.86 லட்சம் கோடிக்கு மேல் ஆகும். இதன் மூலம், உலகின் முதல் டிரில்லியனர் என்ற புதிய அடையாளத்தை மஸ்க் பெற்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ மாற்றிய கணக்கு
Image Credit : Asianet News

ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ மாற்றிய கணக்கு

ஸ்பேஸ்எக்ஸ் பங்குச் சந்தையில் அறிமுகமான உடனேயே முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலரைக் கடந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் நேரடி தாக்கம், நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பில் பிரதிபலித்தது. ஒரே நாளில் மட்டும் அவரது செல்வம் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

Related Articles

Related image1
Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்
Related image2
7 Lakh Cover: உங்க சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாயும் பிடிக்க மாட்டாங்க.. ஆனா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும்!
35
மற்ற பணக்காரர்களை விட பல மடங்கு முன்னிலை
Image Credit : Getty

மற்ற பணக்காரர்களை விட பல மடங்கு முன்னிலை

இந்த சாதனையின் மூலம், உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தனது முன்னிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் உள்ள பல தொழிலதிபர்களின் மொத்த சொத்து மதிப்பை விட, மஸ்கின் செல்வம் தற்போது பல மடங்கு அதிகமாக உள்ளது. அவரது பெரும்பாலான சொத்துக்கள் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களில் உள்ள பங்குகளின் மதிப்பில் உருவாகியுள்ளன.

45
தங்கமாக மாற்றினால் எவ்வளவு?
Image Credit : Getty

தங்கமாக மாற்றினால் எவ்வளவு?

1 டிரில்லியன் டாலர் என்ற எண்ணிக்கை பலருக்கும் கற்பனைக்கு எட்டாததாக இருக்கலாம். இந்த செல்வத்தை முழுமையாக தங்கமாக மாற்றினால், போதுமான அளவு தங்கத்தை வாங்க முடியும் என நிபுணர்கள் கணக்கிடுகின்றனர். இருப்பினும், மஸ்கின் செல்வம் பெரும்பாலும் பங்குகளின் மதிப்பீட்டைக் கொண்ட "காகிதச் சொத்து" என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

55
நிதி உலகில் புதிய அத்தியாயம்
Image Credit : Asianet News

நிதி உலகில் புதிய அத்தியாயம்

ராக்கெட்டுகள், மின்சார கார்கள், செயற்கை நுண்ணறிவு என பல துறைகளில் முதலீடு செய்த எலான் மாஸ்க், தற்போது செல்வ உருவாக்கத்திலும் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த சாதனை, உலக முதலீட்டு சந்தைகளின் சக்தியையும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாக்கத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Elon Musk
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI Holiday Calendar: ஜூன் 15 முதல் 21 வரை வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை? ஆர்பிஐ வெளியிட்ட பட்டியல்
Recommended image2
PPF Investors: பிபிஎஃப் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை.. இந்த விதிகளை மீறினால் நஷ்டம் உறுதி!
Recommended image3
7 Lakh Cover: உங்க சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாயும் பிடிக்க மாட்டாங்க.. ஆனா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும்!
Related Stories
Recommended image1
Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்
Recommended image2
7 Lakh Cover: உங்க சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாயும் பிடிக்க மாட்டாங்க.. ஆனா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved