ஈசியா ஆகலாம் பிஸ்னஸ் மேன்.! செம சீக்ரெட் மச்சி.! தெரிஞ்சிகிட்டா நீயும் Rich.!
தொழிலதிபராக வெற்றி பெற புத்திசாலித்தனம், கடின உழைப்பு மட்டும் போதாது. சரியான மனப்பான்மை, பொறுப்புணர்வு, மற்றும் முக்கியமான குணநலன்கள் தேவை. இந்தக் கட்டுரை வெற்றிகரமான தொழிலதிபராக உருவாக தேவையான மனப்பான்மையை விளக்குகிறது.

Fun-னா இருந்தாலே கிடைக்கும் விண்.!
தொழில் தொடங்கி வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!. ஆனால் சில சின்ன விஷயங்களை செய்தாலே தொழில் தொடங்கும் அனைவரும் அதிபர்களாக வெற்றியுடன் வளம் வரலாம். தொழிலதிபராக வெற்றி பெறுவதற்கு புத்திசாலித்தனம், கடின உழைப்பு, படிப்பு, மற்றும் தொழில் அனுபவம் மட்டும் போதுமானதா? என்றால் அது போதுமானது கிடையாது என்பதே பதிலாக உள்ளது. பலர் இந்தப் பண்புகளுடன் தொழில் தொடங்கினாலும், ஒரு குறுகிய காலத்தில் தோல்வியைச் சந்திக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஒரு தொழிலாளியாக சிந்திக்கும் மனப்பாங்கிற்கும், ஒரு தொழிலதிபராக சிந்திக்கும் மனப்பாங்கிற்கும் இடையே உள்ள வேறுபாடே காரணம் என்று அத்துறையில் உள்ளோர் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தோஷமான மனநிலை உங்களை தெளிவாக முடிவெடுக்க வைக்கும். இந்தக் கட்டுரையில், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக உருவாக தேவையான மனப்பான்மை, பொறுப்புணர்வு, மற்றும் முக்கியமான குணநலன்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுகிட்டா நீங்கதான் கிங்கு! எல்லோரையும் ஆக்கிடுவிங்க பங்கு!
தொழிலதிபர் மனப்பான்மை இதுதான்!
தொழில் தொடங்கும் ஒருவர் தொழிலதிபராக வெற்றி பெறுவதற்கு எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு என்ற மனப்பக்குவமே காரணம் ஆகும். இந்த மனநிலை இல்லாதவர்கள், தோல்வியோ நஷ்டமோ ஏற்படும் போது மற்றவர்கள் மீது பழி சுமத்துவது, சூழ்நிலைகளை குறை சொல்வது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். ஆனால், ஒரு தொழிலதிபர் தனது வெற்றி மற்றும் தோல்வி இரண்டிற்கும் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். இந்த மனப்பாங்கு ஒருவரை சவால்களை எதிர்கொள்ளவும், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், முன்னேறவும் உதவுகிறது. தவறு என்ன என்பதை தெரிந்துகொண்டால் அதில் இருந்து வெளியே வரும் வழி தானே திறந்து விடும் என்பது உண்மைதானே!
இப்படி இருந்தா கப்பு உங்களுக்குதான்!
பொறுப்புணர்வு எனும் திடம் (Accountability)
லாபமோ நஷ்டமோ ஒரு தொழிலதிபர் முதலில் எல்லா முடிவுகளுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். தவறு நடந்தால், அதை ஒப்புக்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்று முன்னேறி சாதிக்க வேண்டும். இது ஒரு தொழிலாளியின் மனநிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தொழிலாளிகள் பெரும்பாலும் தங்கள் தவறுகளை மற்றவர்கள் மீது பழி போடுவதற்கு பழகியிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆயவு.
நெகிழ்ச்சி இருப்பது அவசியம் (Resilience)
தொழில் உலகில் தோல்விகள்,தடைகள் மற்றும் நஷ்டம் தவிர்க்க முடியாதவை என்பதை உணர்ந்தாலே நம் கண்முன் இருக்கும் பிரச்சினைகள் காணாமல் போகும்.. ஆனால், ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் இந்த தோல்விகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, மீண்டும் முயற்சி செய்யும் மனவலிமை கொண்டிருக்க வேண்டும். எதையும் திட்டமிட்டு செய்யும் பொது கிட்ட வரும் வெற்றி கனி! அதுதானே ஒரு தொழில் அதிபரின் பணி!
விஷன் எனும் காக்கும் திறன்!
முடிவெடுக்கும் திறன் (Decision-Making)
சரியான முடிவை சரியான நேரத்தில் முறையாக எடுத்தாலே அது உங்களுக்கு வெற்றிக்கனியை தட்டில் கொண்டு வந்து வைக்கும். ஒரு தொழிலதிபர் தனது நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமான முடிவுகளை துணிச்சலுடன் எடுக்க வேண்டியது அவசியம். இதற்கு ஆபத்துகளை பகுப்பாய்வு செய்யும் திறனும், தகவல்களை விரைவாக மதிப்பீடு செய்யும் திறமையும் கண்டிப்பாக தேவை.
Vision இருந்தால் கோல் போடலாம்!
திட்டமிடல், தொலைநோக்கு பார்வை ஆகியவை இருந்தால் எந்த பந்தையும் சிக்சர் அடிக்கலாம். ஒரு தொழிலதிபருக்கு தெளிவான இலக்கு மற்றும் அதை அடைய வழிகாட்டும் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். இது நிறுவனத்தின் திசையை தீர்மானிக்கவும், ஊழியர்களை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. போகும் திசை, இலக்கு ஆகியவற்றை தனது நிறுவன ஊழியர்களிடம் கூறும் போது அது உங்களை அதிபர் நாற்காலியில் அமர வைத்து அழகுபார்க்கும்.
படிப்பு மட்டும் போதுமா.?!
தகவமைப்புத் திறன் (Adaptability)
மாற்றத்தை ஏற்றுகொள்வது ஒரு தலைமையின் அவசியமான மனப்பான்மை. சந்தை மாற்றங்கள், வாடிக்கையாளர் தேவைகள், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் திறன் ஒரு தொழிலதிபருக்கு இன்றியமையாதது. எப்போதும் எதிலும் அப்படேட்டாக இருப்பது உங்கள் பணியை எளிதாக மாற்றி உங்களை சாதனையாளர் ஆக்கும்.
படிப்பு மற்றும் திறமையின் பங்கு
படிப்பு மற்றும் திறமை முக்கியமானவை என்றாலும், அவை மட்டும் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது. இன்றைய போட்டி நிறைந்த உலகில், MBA போன்ற உயர்கல்வி ஒரு தொழிலதிபருக்கு அறிவு மற்றும் நம்பிக்கையை அளிக்கலாம். ஆனால், மனப்பாங்கு இல்லையெனில், இந்த அறிவு முழுமையாக பயன்படுத்தப்படாமல் போகலாம். உதாரணமாக, ஒரு MBA பட்டதாரி சிறந்த மேலாண்மை திறன்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் தோல்விகளை எதிர்கொள்ளும் மனவலிமை இல்லையெனில், அவரால் தொழிலில் நீடிக்க முடியாது.
தொழிலதிபராக மாறுவதற்கு தேவையான பயிற்சி
எல்லோருக்கும் சுய மதிப்பீடு என்பது முக்கியமான விஷமாகும். அதிலும் தொழில் செய்வோருக்கு இது மிகவும் அவசியம். உங்களுடைய பலம், பலவீனம், மற்றும் மனநிலையை மதிப்பீடு செய்யுங்கள். நீங்கள் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். வெற்றிகரமான தொழிலதிபர்களின் வாழ்க்கையை படித்து அவர்களின் தோல்விகள் மற்றும் வெற்றிகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல் தொழிலதிபர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கு மதிப்புமிக்க பாடங்களை அளிக்கும். தொழில் உலகில் நடக்கும் மாற்றங்களைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். புதிய தொழில்நுட்பங்கள், சந்தைப் போக்குகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளுங்கள்.
வெற்றி மேல் வெற்றி
ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக உருவாக, புத்திசாலித்தனம், கடின உழைப்பு, மற்றும் படிப்பு மட்டும் போதாது. சரியான மனப்பாங்கு தான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது. எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு என்ற மனநிலையுடன், நெகிழ்ச்சி, முடிவெடுக்கும் திறன், தொலைநோக்கு பார்வை, மற்றும் தகவமைப்புத் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். இவை உங்களை ஒரு சிறந்த தொழிலதிபராக உருவாக்கும். வெற்றியை ருசிக்க கடின உழைப்பு தேவைதான். அதனுடன் சில நல்ல விஷயங்களும் சேர்ந்தால் நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற்று தொழில் அதிபராகி உச்சம் அடைவீர்கள் என்றால் அது மிகையல்ல!