- Home
- Business
- Start-up: தொழில் தொடங்க வேணுமா ரூ.50 லட்சம்.?! ஐடியா இருந்தா வாங்க.! அள்ளிக்கிட்டு போங்க.!
Start-up: தொழில் தொடங்க வேணுமா ரூ.50 லட்சம்.?! ஐடியா இருந்தா வாங்க.! அள்ளிக்கிட்டு போங்க.!
புதிய தொழில் தொடங்க ஐடியா இருக்கா? ஸ்டார்ட்-அப் இண்டியா சீட் ஃபண்ட் ஸ்கீம் மூலம் ₹50 லட்சம் வரை கடன் ₹20 லட்சம் வரை மானியம் பெறலாம். மத்திய அரசின் இந்த திட்டம் புதிய கண்டுபிடிப்புகள், மாதிரி தயாரிப்பு மற்றும் சந்தை சோதனைகளுக்கு நிதியுதவி அளிக்கிறது.

ஐடியா இருந்தா பணம் கிடைக்கும்!
உங்ககிட்ட தொழில் தொடங்க ஐடியா இருக்கா அப்ப நீங்க உடனே அதனை வைத்து 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். மேலும் ஆரம்பகட்ட பணிகளுக்காக 20 லட்சம் ரூாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்பு, மாதிரி தயாரிப்பு மற்றம் சந்தை சோதனைகளுக்கும் அரசு உதவி செய்து வருகிறது. அதனை தெரிஞ்சு கிட்டா Start-up தொடங்க நினைக்கும் எல்லோரும் பயன் பெறலாம். ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கலாம்
மத்திய அரசின் மகத்தான பணி
இந்தியாவில் புதுமையான தொழில்கள் உருவாகும் சூழலை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்துறை ஊக்குவிப்பு துறை (DPIIT) Start-up India Seed Fund Scheme (SISFS) திட்டத்தை தொடங்கி, புதிய சிந்தனையுடன் வரும் அனைவருக்கும் உதவி செய்து வருகிறது.
ரூ.50 லட்சம் கிடைக்கும்!
இந்த திட்டத்தின் கீழ் புதிய கண்டுபிடிப்பு, மாதிரி தயாரிப்பு, மற்றும் சந்தை சோதனைகள் போன்ற ஆரம்ப கட்ட பணிகளுக்காக ₹20 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், பெரிய அளவில் வளர்ச்சி பெற விரும்பும் ஸ்டார்ட்-அப்புகளுக்கு ₹50 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்.
பணத்தை எதற்கு பயன்படுத்தலாம்.?
மத்திய அரசு வழங்கும் நிதிகள் மாதிரித் தயாரிப்பு, சந்தை ஆய்வுகள், வணிக செயலாக்கம் போன்ற பணிகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். தொழிற்சாலை கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு பணிக்காக இந்த நிதி பயன்படுத்த அனுமதி இல்லை. உள்கட்டமைப்பு உள்ளிட்ட மற்ற வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு வேறு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை நாம் பயன்படுத்திகொள்ளலாம்.
கண்டிப்பாக விஷன் வேண்டும்!
நல்ல பிஸ்னஸ் ஐடியா இருக்கு நிதி வேண்டும் என நினைப்பவர்கள் ஈசியா விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்பும் ஸ்டார்ட்-அப்புகள், DPIIT அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிறுவனம் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப அடிப்படையில் பிரச்சினையை தீர்க்கும் திறன் உள்ள வணிக எண்ணம் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
யாருக்கு முன்னுரிமை தெரியுமா?
விவசாயம், சுகாதாரம், கல்வி, எரிசக்தி, பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதுமை கொண்ட ஸ்டார்ட்-அப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திகொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
எப்படி விண்ணப்பிக வேண்டும்.?
இத்திட்டத்தில் சேர்ந்து விண்ணப்பிக்க விரும்புவோர் seedfund.startupindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணய தளத்தில் ‘Apply Now’ என்பதை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம், நம்மிடம் உள்ள புதுமையான எண்ணங்களை வணிக முயற்சிகளாக மாற்றும் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. அரசின் நிதி ஆதரவைப் பயன்படுத்தி உங்கள் கனவுகளை செயலாக்குங்கள்! நாளை இந்தியாவை உருவாக்கம் கனவுடன் தொழில் துறையில் சாதிக்க துடிப்போருக்கு இந்த திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.