Post Office Scheme : உங்களை பணக்காரர் ஆக்கும் 4 போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் - முழு விபரம் இதோ !!
தபால் அலுவலகத்தில் இருக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தத் திட்டங்களுக்கு 7 சதவீதத்துக்கும் மேல் வட்டி பெறப்படுகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பாதுகாப்பான முதலீடு மற்றும் பெரும் வருமானம் ஈட்டும் சிறந்த தேர்வாக அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் கருதப்படுகின்றன. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அஞ்சல் அலுவலக திட்டங்களில் பெறும் வட்டியை அரசாங்கம் மாற்றுகிறது. தற்போது இதுபோன்ற 4 திட்டங்கள் உள்ளன. நீங்கள் முறையாக முதலீடு செய்தால் இந்த திட்டங்கள் உங்களை பணக்காரர்களாக மாற்றும். அவற்றை பற்றி காண்போம்.
கிசான் விகாஸ் பத்ரா யோஜனா (KVP) என்பது தபால் அலுவலகத்தின் சிறப்பு திட்டங்களில் ஒன்றாகும். முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். இருப்பினும், இதன் கீழ் வரி விலக்கு கிடைக்காது. தற்போது இந்தத் திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்புச் சான்றிதழின் வட்டி விகிதம் தற்போது 7.70% ஆக உள்ளது. திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். இது இன்னும் நீட்டிக்கப்படலாம். சுமார் 10 ஆண்டுகள் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அதிகபட்சமாக 1.5 லட்சம் முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியும் தபால் அலுவலகத்தின் பணம் சம்பாதிக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்திற்கு 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகிறது. அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1.5 லட்சம் ஆகும்.
தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் வங்கி FD போன்றது. 1 வருடம், 2 வருடங்கள், 3 வருடங்கள் மற்றும் 5 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு 6.80% முதல் 7.5% வரை வட்டி கிடைக்கும். குறுகிய காலத்தில் சிறந்த வருமானத்தைப் பெற இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!