இத்தனை மாதங்கள் பயன்படுத்தாவிட்டால்.. உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்!
பரிவர்த்தனை செய்யாத வங்கிக் கணக்கு செயலிழந்து, ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பேமெண்ட்கள் தடைசெய்யப்படலாம். சம்பளம் போன்ற வரவுகள் தாமதமாகலாம்.

செயலிழந்த வங்கி கணக்கு
நீங்கள் இரண்டு ஆண்டுகளாக உங்கள் வங்கிக் கணக்கில் எந்த பரிவர்த்தனையும் செய்யவில்லையா? அப்படியானால் கவனமாக இருக்க வேண்டும். ஏடிஎம் வழியாக பணம் எடுப்பது நிறுத்தப்படலாம், ஆன்லைன் பேமெண்ட்கள் தடை செய்யப்படலாம், சம்பளம் அல்லது வரி ரீஃபண்ட் போன்ற முக்கியமான வரவுகள் தாமதமாகலாம். ஆனால் கவலைப்படத் தேவையில்லை. இந்த நிலையை எளிதில் சரி செய்யலாம். முதலில், செயலிழந்த கணக்கு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வது முக்கியம்.
செயலிழந்த கணக்கு என்றால் என்ன?
ஒரு வருட காலம் வரை பணம் எடுப்பது, செலுத்துவது, நிதி பரிமாற்றம் செய்வது, அல்லது நெட் பேங்கிங் லாகின் செய்வது போன்ற எந்தவொரு தனிப்பட்ட நடவடிக்கையும் செய்யவில்லையெனில், அந்த கணக்கு "செயலிழந்தது" என வங்கி கருதும். மேலும், 24 மாதங்கள் எந்தவொரு செயல்பாடும் இல்லை என்றால், அது "செயலற்றது" (Dormant) ஆக மாறிவிடும். இதன் காரணமாக சில சேவைகள் நிறுத்தப்படுகின்றன, ஆனால் சேமிப்பு வட்டி தொடர்ந்து சேர்க்கப்படும்.
செயலிழந்த கணக்கின் பாதிப்புகள்
செயலிழந்த வங்கி கணக்கில் பல சிக்கல்கள் வரும். ஏடிஎம், டெபிட் கார்டு, ஆன்லைன் பரிவர்த்தனைகள் தடை செய்யப்படும். ஆட்டோ டெபிட், பில் பேமெண்ட், முதலீட்டு வருமான வரவுகள் நிறுத்தப்படலாம். நீண்ட காலமாக செயல்படாத கணக்கின் இருப்பு RBI-யின் DEAF நிதிக்கு மாற்றப்பட வாய்ப்பு உண்டு. இதனால் உங்கள் நிதி திட்டங்கள் தடுமாறக்கூடும்.
மீண்டும் செயல்படுத்துவது எப்படி?
செயலிழந்த கணக்கை மீண்டும் செயல்படுத்த, அருகிலுள்ள வங்கி கிளைக்கு சென்று அடையாளச் சான்று, முகவரிச் சான்று கொடுத்து எழுத்துபூர்வ கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சில வங்கிகள் KYC புதுப்பித்த பின் நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் மீண்டும் செயல்படுத்தும் வாய்ப்பும் தருகின்றன. கணக்கு செயலிழக்காமல் இருக்க ஆண்டுக்கு குறைந்தது ஒரு பரிவர்த்தனை, இருப்புச் சரிபார்ப்பு அல்லது பாஸ்புக் அப்டேட் செய்தாலே போதும். இதனால் உங்கள் கணக்கு எப்போதும் பாதுகாப்பாகவும் சீராகவும் இயங்கும்.