தினமும் ரூ.3,000 வரை லாபம் தரும் ஐஸ் கிரீம் கோன், கப் தயாரிப்பு தொழில்! இப்போதே தொடங்கலாம் இதோ ஐடியா!
சுயதொழில் உங்கள் இலக்காக இருந்தால், உங்களுக்கான ஒரு சிறந்த தொழில் யோசனை இதோ! வேலைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. குறைந்த முதலீட்டில் இந்த தொழிலை தொடங்கலாம். இந்த தொழிலை சரியாக செய்தால் தினமும் ரூ.3,000 வரை லாபம் ஈட்டலாம். இந்த தொழிலைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது ஐஸ்கிரீம்கள். கொஞ்சம் வெயில் அடித்தால் உடனே ஐஸ் கிரீம் சாப்பிடத் தோணும் இல்லையா. குழந்தைகளாக இருந்தால் எங்கு சென்றாலும் முதலில் அவர்கள் வாங்கச் சொல்வது ஐஸ்கிரீம்களைத்தான். இப்போது ஒவ்வொரு விழாவிலும் ஐஸ்கிரீம்கள் இல்லாமல் சாப்பாடு பரிமாறுவதில்லை. பருவம் எதுவாக இருந்தாலும் எப்போதும் இதற்கு நல்ல தேவை உள்ளது. இவ்வளவு பாப்புலராக உள்ள ஐஸ்கிரீம் கோன்கள், கப்கள் தயாரிக்கும் தொழிலை நீங்கள் செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம்.
ஐஸ் கிரீம் கோன் தயாரிப்பு தொழிலை தொடங்க சில திட்டமிடல் மற்றும் கடின உழைப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். இதில் முக்கியமாக மூலப்பொருட்கள், இயந்திரங்கள், சந்தைப்படுத்தல், உரிமங்கள் போன்றவற்றைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். முதலில் நீங்கள் இருக்கும் பகுதியில் இந்த தொழிலை யார் செய்கிறார்கள்? எப்படி நிர்வகிக்கிறார்கள்? லாபகரமாக இயங்குகிறதா? போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வேண்டும். சந்தை விலைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மூலப்பொருட்கள், செலவுகள் இப்படி.. ஐஸ்கிரீம் கோன்கள், கப்கள் தயாரிக்க முக்கியமாகத் தேவைப்படுபவை மைதா, சர்க்கரை, நெய், பால் பொருட்கள், சுவைக்கூட்டு சாறுகள். இவற்றை சந்தையில் மொத்தமாக வாங்க வேண்டும். இதனால் முதலீட்டுத் தொகை குறையும். கோன்கள், கப்கள் தயாரித்த பிறகு, பொதி செய்யும் செலவு சுமார் ரூ.5 முதல் ரூ.15 வரை இருக்கும். இவை தவிர மின்சாரம், தண்ணீர், பணியாளர்களின் சம்பளம் போன்ற செலவுகள் இருக்கும்.
இயந்திரங்கள், கருவிகள் | ஐஸ் கிரீம் கோன் தயாரிக்க கோன் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும் இயந்திரம் சில நொடிகளில் பல கோன்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். குளிர்பதன சாதனங்கள், பொதி இயந்திரங்களும் தேவைப்படும். ஐஸ் கிரீம் கோன் தயாரிப்பு, கப்கள் தயாரிக்க சிறிய அளவிலான இயந்திரங்கள் ரூ.2 லட்சத்தில் இருந்து கிடைக்கின்றன. அதிக திறன் கொண்ட இயந்திரங்கள் ரூ.10 லட்சம் வரை இருக்கும். தயாரிப்பை சேமித்து வைக்க சேமிப்பு அலகுகளை அமைக்க வேண்டும். அவற்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும்.
உரிமங்கள், பதிவுகள்| சிறு தொழில்கள் தொடங்க வங்கிகள் கடன் வழங்குகின்றன. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் முதலீட்டை திரட்டலாம். ஐஸ்கிரீம் கோன், கப்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க விரும்பினால் கட்டாயம் FSSAI உரிமம் (Food Safety and Standards Authority of India) பெற வேண்டும். இவற்றுடன் பஞ்சாயத்து என்றால் பஞ்சாயத்து அனுமதி, நகரம் என்றால் நகராட்சி அனுமதிகள் பெற வேண்டும்.
சந்தைப்படுத்தல், விற்பனை | உள்ளூர் சந்தைகளில் சிலர் சில்லறை கடைகளில் ஒப்பந்தங்களைப் பெற வேண்டும். சமூக ஊடகங்கள், வலைத்தளம் மூலம் ஆன்லைனில் உங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்தலாம். நல்ல பேக்கேஜிங், லேபிளிங் தயாரிப்புக்கு சந்தையில் முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஐஸ் கிரீம் கோன், கப்கள் தயாரிக்கும் தொழிலில் செலவுகள், லாபங்கள் அனைத்தும் வணிக அளவு, உற்பத்தி திறன், சந்தை நிலவரங்களைப் பொறுத்து மாறுபடும்.
உற்பத்தி | ஒரு சிறிய கோன்கள் தயாரிக்கும் இயந்திரம் ஒரு நொடிக்கு சுமார் 10-30 கோன்கள் வரை தயாரிக்கிறது. உற்பத்தி செலவு ஒரு கோனுக்கு சுமார் ரூ.50 பைசாவிலிருந்து ரூ.2 வரை ஆகும். சந்தையில் ஒரு கோனை சுமார் ரூ.2 முதல் ரூ.5 வரை விற்கலாம். கப்கள் தயாரிப்பில் ஒரு கப்புக்கு சுமார் ரூ.75 பைசாவிலிருந்து ரூ.2 வரை செலவாகும். இவற்றை சந்தையில் சுமார் ரூ.3 முதல் ரூ.6 வரை விற்கலாம்.
லாபங்கள் | நீங்கள் ஒரு கோனை ரூ.2 க்கு தயாரித்தால் சந்தையில் அதை ரூ.5 வரை விற்கலாம். அதாவது ஒரு கோனுக்கு சுமார் ரூ.3 லாபம் கிடைக்கும். ஒரு கப்பை ரூ.2 ல் தயாரித்தால் அதை ரூ.6 வரை விற்கலாம். அதாவது ஒரு கப்பிற்கு சுமார் ரூ.4 லாபம் வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 1000 கோன்கள் அல்லது கப்கள் விற்றால் கோன்களில் இருந்து கிடைக்கும் லாபம் சுமார் ரூ.3,000 வரை சம்பாதிக்கலாம். கப்களில் இருந்து கிடைக்கும் லாபம் சுமார் ரூ.4,000 உங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம். இந்த வகையில் மாதம் ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.