Equity mutual fund | எவ்வளவு முதலீட்டில் ரூ.1 கோடி எளிதாக சேமிக்கலாம் தெரியுமா?
நடுத்தர குடும்பத்தினர் மாத சேமிப்பில் இருந்து எப்படி ரூ.1 கோடி சேர்க்கலாம் என்பதை இந்த பதிவு விளக்குகிறது. குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் விரைவாக இந்த இலக்கை அடைய வழிமுறைகளை எடுத்துரைக்கிறது.
இன்றைய முதலீடு நாளைய வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் என்பை உணர்ந்து பலரும் முதலீடு செய்து சேமித்து வருகின்றனர். வங்கிகள், அஞ்சல் துறை நிலையான மற்றும் லேசான மாறு வீத வட்டி விகிதத்தில் குறைந்த அளவு லாபத்தை வழங்குகின்றன. பங்கு வர்த்தகம் மற்றும் மியூச்சுவல் பண்டு நிதி இழப்பு அபாயத்தை கொண்டிருந்தாலும், முறையாக ஆராயந்து திட்டமிடுபவர்களுக்கு அதிக லாபத்தை வழங்குகிறது.
மாதம் சம்பளதாரர் ஒருவர் ரூ.1 லட்சம் பெருகையில் முறையாக திட்டமிட்டு முதலீடு செய்தால் விரைவில் கொஞ்ச நாளில் ஒரு கோடி ரூபாய் என்ற இமாலய இலக்கை சேமிக்க முடியும்.
SBI முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்களின் குறைந்த முதலீடு மிகப்பெரிய தொகையாக மாறியிருக்கும் என்கின்றனர் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து லாபத்தை அதிகளவு எதிர்பார்ப்பவர்களுக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity mutual fund) பொருத்தமாக இருக்கும்.
mutual fund.
RD மற்றும் FD-க்களை விட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity mutual fund) நீண்ட கால முதலீட்டில் அதிகளவு லாபத்தை தரும் என கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, Nifty-50 குறியீட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Fund) கணிசமான லாபத்தை அளித்துள்ளன. உதாரணமாக, ரூ.1 லட்சம் சம்பளம் பெரும் நபர் தன்னுடைய சம்பளத்தில் குறைந்தது 15% முதல் 20% வரை முதலீடுக்கென என ஒதுக்க வேண்டும். அந்த முதலீடு ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து ஒரு கோடி ரூபாயை என பெரிய தொகையாக மாறிவிடும்.
Mutual Funds
ஒரு கோடி லாபம்
ஒரு லட்சம் ரூபாய் ஊதியத்தில், 15 சதவீதமான 15,000 ரூபாயை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் (Equity mutual fund) திட்டங்களில் முதலீடு செய்வதகக்கொண்டால், அவை ஆண்டுக்கு 12% சதவீதம் வட்டிவீதம் லாபம் தருவதாகக்கொண்டால் நம் முதலீடு 211 மாதங்களில் ஒரு கோடி ரூபாயை என்ற இலக்கை அடையும். அதே போல் மாதத்திற்கு 20 சதவீதமான 20,000 ரூபாயை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் (Equity mutual fund) திட்டங்களில் முதலீடு செய்தாகக்கொண்டால் 185 மாதங்களில் ஒரு கோடி ரூபாயை சம்பாதித்து விட முடியும்.
Mutual Funds
மேலும், அதே முதலீட்டில் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய SBI முதலீட்டினை 5% சதவீதம் என உயர்த்திக்கொண்டே வந்தால் மாதம் ரூ.15,000 ரூபாய் முதலீடு செய்பவர் ஆண்டுக்கு அதனை 5% என உயர்த்தி வந்தால் 186 மாதங்களிலேயே ஒரு கோடி ரூபாயை எட்டி விட முடியும். இதே நடைமுறையில் 20,000 முதலீடு செய்பவர் 164 மாதங்களில் 1 கோடி ரூபாயை பெற முடியும்.
KVP Scheme | 6 லட்சம் போட்டா 12 லட்சம், 10 லட்சம் போட்டா 20 லட்சம்! -உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம்!
குறிப்பு | Equity mutual fund நிதியிழப்பு அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யு முன் உங்களின் முதலீட்டு ஆலோகரின் அறிவுரையை பின்பற்றவும்.