டிமார்ட்டுக்கு போறீங்களா? அடுத்த முறை இதை மறக்காதீங்க.. சேவிங்ஸ் டிப்ஸ்
டிமார்ட்டில் அதிக சேமிப்பு செய்ய வார நாட்களில் காலை நேரத்தில் சென்று டிமார்ட் பிரைவேட் லேபிள் பொருட்களை வாங்கலாம். டிமார்ட்டில் ஷாப்பிங் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை பற்றி பார்க்கலாம்.

டிமார்ட் ஷாப்பிங் டிப்ஸ்
டிமார்ட்டில் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? உங்களுக்கான செய்திதான் இது. டிமார்ட்டில் அதிக சேவிங்ஸ் பெற, வார நாட்களில் காலை நேரத்தில் செல்லுங்கள். அப்போது கூட்டம் குறைவாக இருக்கும், சலுகை பொருட்கள் எளிதாக கிடைக்கும். டிமார்ட் பிரைவேட் லேபிள் (DMart Minimax, Fresh) போன்ற பிராண்டுகளை வாங்க முயற்சி செய்து பாருங்கள்.
டிமார்ட் தள்ளுபடி சலுகைகள்
இவை குறைந்த விலையில், நல்ல தரத்தில் கிடைக்கும். சோப், டிடர்ஜெண்ட் போன்றவற்றை மொத்தமாக வாங்கினால் கூடுதல் சேவிங் கிடைக்கும். சில பொருட்கள் காலாவதி தேதிக்கு அருகில் வந்தால் 30%-50% வரை தள்ளுபடி கிடைக்கும்.
டிமார்ட் பண்டிகை சேல்
மேலும், பண்டிகை காலங்களில் (தீபாவளி, பொங்கல்) மற்றும் பருவம் மாறும் நேரங்களில் (கோடை, மழை, குளிர்) தொடர்பான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடி வரும். டிமார்ட் விலை வாரந்தோறும், சில சமயம் தினசரி மாறும். நீங்கள் வாங்கும் பொருட்களின் விலையை கவனித்து, குறைவான விலையில் அடிக்கடி வாங்கலாம்.
டிமார்ட் ப்ரைவேட் லேபிள் சேமிப்பு
சில பொருட்கள் ஆன்லைனில் அதிகம், ஸ்டோரில் குறைவாக இருக்கும். எனவே நீங்கள் ஒப்பிட்டு வாங்கினால் சேமிப்பு அதிகரிக்கும். மேலும், டிமார்ட்-இல் மட்டுமே கிடைக்கும் சிறப்பு பொருட்கள் விலை குறைவாக இருக்கும். பில்லில் "D" என்ற குறியீடு இருந்தால் அது டிமார்ட்டின் சிறப்பு தள்ளுபடி பொருள் ஆகும்.
டிமார்ட் பருவ தள்ளுபடிகள்
இதை அடையாளம் கண்டு வாங்கினால் நல்ல சேவிங்ஸ் கிடைக்கும். மொத்தத்தில், வார நாட்களில், பிரைவேட் லேபிள் பொருட்கள், மொத்தமாக வாங்கி, தள்ளுபடி குறியீடுகளை கவனித்தால், டிமார்ட் ஷாப்பிங் அனுபவம் இன்று லாபகரமாக இருக்கும்.