தீபாவளிக்கு முன் மெகா சர்ப்ரைஸ்! பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்!
தீபாவளியை முன்னிட்டு, உத்தரபிரதேச அரசு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.86 கோடி பெண்கள் பயனடைவார்கள், மேலும் சிலிண்டர் விநியோகம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையல் தீபாவளியை முன்னிட்டு கோடிக்கணக்கான பெண்கள் பெரிய பரிசைப் பெற உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன. சில இடங்களில் மாதாந்திர உதவித்தொகை, சில இடங்களில் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பெண்களுக்கு இலவச சிலிண்டர்
இந்த பண்டிகை காலத்தில் பெண்கள் இலவச எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுவார்கள். சிலிண்டர் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இத்திட்டத்தின் கீழ் 1.86 கோடி பெண்கள் பயனடைவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 1.85 கோடி பெண்களுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். எல்பிஜி ரீஃபில் விநியோகம் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
இலவச எல்பிஜி ரீஃபில்கள்
இந்த திட்டம் உத்தரபிரதேசத்தில் செயல்படுத்தப்படுகிறது. அங்குள்ள பெண்கள் தீபாவளிக்கு முன் இலவச எரிவாயு பெறுவார்கள். இலவச எல்பிஜி ரீஃபில்கள் ஆண்டுக்கு இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்.
ரூ.1,500 கோடி பட்ஜெட்
இத்திட்டத்திற்காக உத்தரபிரதேச மாநில அரசு ரூ.1,500 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக 1.23 கோடி ஆதார் அடிப்படையிலான பயனாளிகளுக்கு எரிவாயு ரீஃபில் வழங்கப்படும்.