- Home
- Business
- ஏடிஎம்மில் கிழிந்த நோட்டு வந்தால் என்ன செய்வது.? ஆர்பிஐயின் இந்த விதி உங்களுக்கு தெரியுமா.?
ஏடிஎம்மில் கிழிந்த நோட்டு வந்தால் என்ன செய்வது.? ஆர்பிஐயின் இந்த விதி உங்களுக்கு தெரியுமா.?
ஏடிஎம்-ல் இருந்து கிழிந்த அல்லது சேதமடைந்த நோட்டு வந்தால், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இதுபற்றி ஆர்பிஐ விளக்கமளித்துள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

கிழிந்த நோட்டு மாற்றுவது எப்படி
ATM-ல் பணம் எடுத்தபோது புதியதாக, சுத்தமாக உள்ள நோட்டுகள் கிடைக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் மெஷினில் இருந்தே கிழிந்த, பிளந்த, மூலை சுருண்ட அல்லது எண் தெளிவாக தெரியாத நோட்டு வந்து விடும். இப்படி வந்துவிட்டால் “இதை யார் ஏற்கப் போறாங்க?” என்ற சந்தேகம் ஏற்படுவது சாதாரண விஷயம் ஆகும். ஆனால் உண்மையில் இது வாடிக்கையாளரின் பிரச்சினை அல்ல, இது முழுவதும் வங்கியின் பொறுப்பு. ஆர்பிஐ-யும் இதற்கான தெளிவான விதிகளை ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஆர்பிஐ என்ன சொல்கிறது?
ஆர்பிஐ விதிப்படி, “ATM-ல் இருந்து வரும் எந்த கிழிந்த நோட்டும், வாடிக்கையாளருக்கு முழு தொகையுடன் மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும்.” அதனால் நீங்கள் ஒரு ரூபாயும் இழக்க வேண்டியதில்லை. கடைக்காரர்கள் வாங்காமல் இருந்தாலும், வங்கி உங்களிடம் எந்த காரணமும் சொல்லாமல் புதிய நோட்டு கொடுக்க வேண்டும். அந்த நோட்டு உண்மையானது என்பதுதான் முக்கியம், அதற்கு மேலே வேறு நிபந்தனை இல்லை.
கிழிந்த நோட்டை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
முதலில் அந்த நோட்டையை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த நோட்டு எடுக்கப்பட்ட வங்கியின் கிளைக்கு சென்று, “இந்த நோட்டு ATM-லிருந்து வந்தது” என்று தெரிவிக்க வேண்டும். உங்களிடம் ATM receipt இருந்தால் கொடுக்கலாம், இல்லையென்றால் வங்கியின் கணினி பதிவில் அது பார்க்க முடியும். நீங்கள் எந்த ATM-ல் எப்போது பணம் எடுத்தீர்கள் என்பதை அவர்கள் account statement மூலம் சரிபார்த்து மாற்றித் தருவார்கள்.
நோட்டு மிகவும் கிழிந்திருந்தால்?
ஒரு நோட்டு இரண்டு துண்டுகளாக இருந்தாலும், கொஞ்சம் சேதமடைந்திருப்பினும் கூட வங்கி மாற்ற மறுக்க முடியாது. ஆர்பிஐ விதிப்படி, இவை “mutilated” அல்லது “damaged” notes என்று வகைப்படுத்தப்படும். எண் இரு பகுதிகளிலும் தெளிவாக இருந்தால் மாற்றம் எளிது. டேப் ஒட்டி கொண்டுவந்தாலும் பிரச்சினை இல்லை, ஆனால் போலி நோட்டு மட்டும் மாற்றமாட்டார்கள்.
சேவை கட்டணம்
மிகவும் முக்கியமான விஷயம் ATM-ல் கிடைத்த கிழிந்த நோட்டை மாற்றுவது முற்றிலும் இலவச சேவை ஆகும். எந்த வங்கியும் charge வசூலிக்கக் கூடாது. யாராவது கேட்டால் உடனே பிரிவினை அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்.

