MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 40% வரை தள்ளுபடி.. அரிசி முதல் சோப்பு வரை விலை குறைவு.. டிமார்ட்டில் எவ்வளவு சேமிக்கலாம்?

40% வரை தள்ளுபடி.. அரிசி முதல் சோப்பு வரை விலை குறைவு.. டிமார்ட்டில் எவ்வளவு சேமிக்கலாம்?

டிமார்ட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 40% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. எவ்வளவு சேமிக்கலாம்? என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 02 2026, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டிமார்ட் 40% தள்ளுபடி
Image Credit : Google

டிமார்ட் 40% தள்ளுபடி

இந்தியாவில் குறைந்த விலையில் தரமான பொருட்களை ஷாப்பிங் செய்ய வேண்டும் என்றால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது டிமார்ட் தான். மாதந்தோறும் குடும்பத் தேவைகளுக்காக ஹோல்சல் கடைகளுக்குச் செல்வது வழக்கமாக இருந்த நடுத்தர வர்க்க மக்கள் கூட இன்று டிமார்ட் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளையே தேர்வு செய்கிறார்கள். ஒருகாலத்தில் உயர்ந்த வருமானம் கொண்டவர்களுக்கான ஷாப்பிங் மால்களாக கருதப்பட்ட இடங்கள், தற்போது பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த இடங்களாக மாறியுள்ளன.

25
குறைந்த விலையில் கொடுக்கும் டிமார்ட்
Image Credit : Getty

குறைந்த விலையில் கொடுக்கும் டிமார்ட்

டிமார்ட் இன் குறைந்த விலை ரகசியம் என்ன? முக்கிய காரணம், மார்க்கெட்டில் இருக்கும் பிரபல பிராண்டுகளுடன் தங்களது சொந்த லேபல் (Private Label) பொருட்களையும் அதிகமாக விற்பனை செய்வதுதான். இந்த சொந்த பிராண்டு, மற்ற பெரிய நிறுவனங்களின் பொருட்களை விட மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் பல பொருட்களை குறைந்த செலவில் வாங்க முடிகிறது.

Related Articles

Related image1
ஹார்முஸ் மூடல்.. இந்தியாவுக்கு பெரிய அதிர்ச்சி.. தங்கம் விலையும் ஏறப்போகுது.!!
Related image2
வரி, பாஸ்டேக், கேஸ் விலை அப்டேட்!.. மார்ச் 1 முதல் பெரிய மாற்றங்கள்!.. மக்களே உஷார்!
35
சலுகை விலையில் கிடைக்கும் மளிகை பொருட்கள்
Image Credit : X

சலுகை விலையில் கிடைக்கும் மளிகை பொருட்கள்

அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் முதல் பிஸ்கட், நம்கீன், கார்ன் ஃப்ளெக்ஸ், காபி பொடி போன்ற தினசரி உபயோகப் பொருட்கள் பொருட்கள் வரை டிமார்ட் லேபலில் கிடைக்கிறது. அதேபோல் சோப்பு, டிடர்ஜென்ட், தரை துடைப்பான், டாய்லெட் கிளீனர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களும் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

45
டிமார்ட் ஷாப்பிங் டிப்ஸ்
Image Credit : Getty

டிமார்ட் ஷாப்பிங் டிப்ஸ்

மேலும், ஆடைகள் மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்களையும் தங்களது “பிரீமியம்” என்ற பிராண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. விலை குறைவாக இருந்தாலும் தரத்தில் சமரசம் செய்யப்படவில்லை என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்களிடையே உருவாகியுள்ளது. பொதுவாக, டிமார்ட் சொந்த பிராண்டு பொருட்கள் மற்ற பிரபல பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது 20 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

55
மாதந்தோறும் சேமிப்பு
Image Credit : Google

மாதந்தோறும் சேமிப்பு

இந்த விலை நன்மைதான் டிமார்ட்டைவெற்றியின் உச்சிக்குக் கொண்டு சென்றது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறைந்த விலை, ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வசதி, மற்றும் நடுத்தர மக்களின் தேவையை புரிந்த வணிகத் திட்டம் ஆகியவை சேர்ந்து டிமார்ட் ஆகும். இந்தியாவின் முக்கிய ரீடெயில் சங்கிலிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாப்பிங்
தள்ளுபடி
சலுகைகள்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹார்முஸ் மூடல்.. இந்தியாவுக்கு பெரிய அதிர்ச்சி.. தங்கம் விலையும் ஏறப்போகுது.!!
Recommended image2
வரி, பாஸ்டேக், கேஸ் விலை அப்டேட்!.. மார்ச் 1 முதல் பெரிய மாற்றங்கள்!.. மக்களே உஷார்!
Recommended image3
100 ரூபாய் எடுத்துச் சென்றால் எந்த நாட்டில் லாபம்? ஈரான், இஸ்ரேல் கணக்கு.. பணக்காரன் ஆகலாம் போலயே
Related Stories
Recommended image1
ஹார்முஸ் மூடல்.. இந்தியாவுக்கு பெரிய அதிர்ச்சி.. தங்கம் விலையும் ஏறப்போகுது.!!
Recommended image2
வரி, பாஸ்டேக், கேஸ் விலை அப்டேட்!.. மார்ச் 1 முதல் பெரிய மாற்றங்கள்!.. மக்களே உஷார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved