சைபர் குற்றவாளிகள் இந்த வழிகளின் மூலம் உங்களை ஏமாற்றுவார்கள்! SBI எச்சரிக்கை!
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் காலத்தில், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் மக்களை எச்சரிக்கின்றன. மோசடி செய்பவர்கள் பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றுகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
Cyber Criminals
நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் குற்றங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனால் சைபர் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அரசும், வங்கிகளும் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, இதுகுறித்து ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மேலும் மோசடி செய்பவர்கள் எந்தெந்த வழிகளில் மக்களை ஏமாற்றுகின்றனர் என்றும் சில அறிவுரைகளை வழங்கி உள்ளது
TRAI தொலைபேசி மோசடி
சில இணைய குற்றவாளிகள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) அதிகாரிகளாகக் காட்டிக்கொண்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் அல்லது KYC இணங்கவில்லை எனக் கூறி, உங்கள் மொபைல் சேவைகளை இடைநிறுத்தப் போவதாக அச்சுறுத்தலாம். இருப்பினும், மொபைல் சேவைகளை டிராய் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.
Cyber Criminals
பார்சல் மோசடி
சில மோசடி செய்பவர்கள் அழைப்பு விடுத்து, உங்களுக்கான பார்சலில் சட்டவிரோதமான பொருட்கள் இருப்பதால் சுங்கத்தில் சிக்கியிருப்பதாகக் கூறுவார்கள். பின்னர் அவர்கள் அபராதம் கோரலாம். அத்தகைய எண்களை உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.
டிஜிட்டல் கைது
துரதிர்ஷ்டவசமாக, இது மிகவும் பிரபலமான மோசடியாகும், இதில் மோசடி செய்பவர்கள் காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு, குற்றச் செயல்கள் குறித்த போலியான குற்றச்சாட்டுகள் குறித்து உங்களை விசாரிப்பதாக அச்சுறுத்துகிறார்கள். உண்மையில் காவல்துறை எந்த வகையான டிஜிட்டல் கைதுகளையும் அல்லது ஆன்லைன் விசாரணைகளையும் நடத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Cyber Criminals
குடும்ப உறுப்பினர் கைது
இந்த வகை மோசடியில், மோசடி செய்பவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் கைது செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். அதன்பிறகு, பணம் வழங்கக் கோருகின்றனர். எனவே எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சரிபார்ப்பது முக்கியம்.
மோசடி விளம்பரங்கள் :
நீங்கள் விரைவில் பணக்காரராகலாம் என்று கூறும் பல விளம்பரங்கள் உள்ளன, சில நேரங்களில் சமூக ஊடகங்களில் சில குறிப்பிட்ட பங்கு முதலீடுகளில் அதிக வருமானம் கிடைக்கும். இவை மோசடிகளாக இருக்கலாம்.
Cyber Criminals
ஆன்லைன் வேலைகள்
சில மோசடி செய்பவர்கள் நீங்கள் எளிய பணிகளைச் செய்ய பெரிய தொகைகளை வழங்குவதாகக் கூறலாம், ஆனால் இந்த எளிதான பணத் திட்டங்கள் அனைத்தும் மோசடிகள் தான்.
உங்கள் பெயரில் லாட்டரி
உங்களுக்கு ஒரு லாட்டரி விழுந்துள்ளது என்ற எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சலைப் பெற்றால், உங்கள் கணக்கு விவரங்கள் அல்லது பாதுகாப்பு வைப்புத் தொகையைக் கேட்டால், அது ஒரு மோசடியாகும்.
தவறான பணப் பரிமாற்றம்
உங்கள் கணக்கில் தவறான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பணத்தைத் திரும்ப அனுப்புமாறு அழைப்பு அல்லது செய்தியைப் பெற்றால், அது மோசடியாக இருக்கலாம். உங்கள் வங்கியுடன் இதுபோன்ற பரிவர்த்தனைகளை எப்போதும் சரிபார்க்கவும்.
Cyber Criminals
KYC அப்டேட்
சில மோசடி செய்பவர்கள் KYC புதுப்பிப்புகளைக் கேட்க இணைப்புகளைப் பயன்படுத்துவார்கள், பெரும்பாலும் வங்கிப் பிரதிநிதிகளாகக் காட்டிக்கொள்வார்கள். வங்கிகள் KYC புதுப்பிப்புகளுக்கான இணைப்புகளை அழைப்பு மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ் மூலமோ அனுப்பமாட்டார்கள். எனவே KYC அப்டேட் குறித்து அழைப்பு வந்தால் அவை மோசடிகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வரி மோசடி :
வேறு சில மோசடி செய்பவர்கள் வரி அதிகாரிகளாக காட்டிக்கொண்டு வங்கி விவரங்களைக் கேட்கலாம். இருப்பினும், வரித் துறையிடம் ஏற்கனவே உங்கள் வங்கி விவரங்கள் உள்ளன என்பதையும், அதைக் கேட்க வேண்டியதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.