MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே பொதுமக்களுக்கு வந்த குட்நியூஸ்! கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே பொதுமக்களுக்கு வந்த குட்நியூஸ்! கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!

பிப்ரவரி 1 முதல் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1,959.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 01 2025, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு பொதுமக்களுக்கு வந்த குட்நியூஸ்! கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு பொதுமக்களுக்கு வந்த குட்நியூஸ்! கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எண்ணெய் நிறுவனங்கள்

எண்ணெய் நிறுவனங்கள்

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடந்து உயர்ந்து வந்தது. பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: பழைய ஓய்வூதியத் திட்டம்! ஆசிரியர்கள் சாலையில் இறங்கி போராடுறாங்க மனம் இரங்கவில்லையா? சொல்வது யார் தெரியுமா?

34
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் குறைத்துள்ளது.  19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.6.50 காசுகள் குறைந்து ரூ.1,959.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

44
வீட்டு உபயோக சிலிண்டர் விலை

வீட்டு உபயோக சிலிண்டர் விலை

அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படத்தியுள்ளது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Facts: ரயில் பெட்ஷீட் ஏன் வெள்ளையாக இருக்கு? பின்னணியில் அறிவியல்! மீம்ஸ் போடுறவங்க இத தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
ATM Rules: இந்த தவறு நடந்தா வங்கி உங்களுக்கு இழப்பீடு தரணும்.. தெரியுமா?
Recommended image3
Vande Bharat Pets: செல்லப் பிராணியுடன் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கலாம்.. இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved