MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Special Train : சென்னை - கன்னியாகுமரி சிறப்பு ரயில் அறிவிப்பு.. திருச்சி, மதுரை, திருநெல்வேலி மக்களும் ஹேப்பி

Special Train : சென்னை - கன்னியாகுமரி சிறப்பு ரயில் அறிவிப்பு.. திருச்சி, மதுரை, திருநெல்வேலி மக்களும் ஹேப்பி

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க, தெற்கு ரயில்வே சென்னை எழும்பூர் மற்றும் கன்னியாகுமரி இடையே சிறப்பு சூப்பர்பாஸ்ட் ரயில்களை அறிவித்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : May 12 2026, 12:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சென்னை கன்னியாகுமரி சிறப்பு ரயில் அறிவிப்பு
Image Credit : Asianet News

சென்னை - கன்னியாகுமரி சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கூடுதல் பயணிகள் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் கன்னியாகுமரி இடையே சிறப்பு சூப்பர்பாஸ்ட் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
கோடை பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
Image Credit : our own

கோடை பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, ரயில் எண் 06045 சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு சூப்பர்பாஸ்ட் ரயில் மே 15, 22, 29 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். மேலும் திரும்பும் பயணமாக ரயில் எண் 06046 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மே 17, 24, 31 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 11.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.

Related Articles

Related image1
Bullet Train: சென்னை டூ பெங்களூரு இனி 2 மணி நேரம் தான்.. 350 கிமீ வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!
Related image2
Indian Railways : ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.. கன்ஃபர்ம் டிக்கெட் தேதி மாற்றம்.. ரத்து கட்டணம் இல்லை
35
சிறப்பு ரயில் அறிவிப்பு
Image Credit : our own

சிறப்பு ரயில் அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில் தமிழகத்தின் முக்கிய நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், அரியலூர், திருச்சி, ஸ்ரீரங்கம், மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த ரயில் நின்று செல்லும். அதிகாலை நேரத்தில் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளை அடைவதால், அந்த பகுதிகளில் இருந்து பயணம் செய்யும் மக்களுக்கு இது பெரிய வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

45
தெற்கு ரயில்வே
Image Credit : our own

தெற்கு ரயில்வே

மேலும் இந்த சிறப்பு ரயில்களில் அனைத்து தரப்பு பயணிகளுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு வகை பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஏசி இரண்டு அடுக்கு, ஏசி மூன்று அடுக்கு, ஸ்லீப்பர், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான சிறப்பு பெட்டிகளும் இடம்பெறுகின்றன. கோடை விடுமுறை சீசன் என்பதால் டிக்கெட் தேவை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, முன்பதிவுகளை விரைவாகச் செய்வதால் ரயில்வே அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

55
கோடை சிறப்பு ரயில்
Image Credit : our own

கோடை சிறப்பு ரயில்

கோடை காலத்தில் குடும்பத்துடன் சொந்த ஊர் செல்லும் மக்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் மற்றும் கோவில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு இந்த சிறப்பு ரயில் சேவை மிகப்பெரிய நிம்மதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் தமிழக பயணிகளுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
ரயில்
இந்திய இரயில்வே
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
மதுரை

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Subsidy: ஆண்டு வருமானத்தை அலசும் அரசு..! இனி இவர்களுக்கு LPG மானியம் கிடையாது..
Recommended image2
Gold: இனி பங்குச்சந்தையில் தங்கம் வாங்கலாம் ஈசியா.! எப்படி தெரியுமா?
Recommended image3
Air India: 1,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய ஏர் இந்தியா! CEO சொன்ன பகீர் காரணம்!
Related Stories
Recommended image1
Bullet Train: சென்னை டூ பெங்களூரு இனி 2 மணி நேரம் தான்.. 350 கிமீ வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!
Recommended image2
Indian Railways : ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.. கன்ஃபர்ம் டிக்கெட் தேதி மாற்றம்.. ரத்து கட்டணம் இல்லை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved