மின்சாதனம் வாங்க போறீங்களா? மத்திய அரசு விதி அமல் - முழு விபரம்
2026 ஜனவரி 1 முதல், மத்திய அரசு புதிய எரிசக்தி சேமிப்பு விதியை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி போன்ற பல மின்சாதனங்களுக்கு ஸ்டார் ரேட்டிங் லேபிளிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிய விதி
புதிய ஆண்டான 2026 தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு முக்கியமான புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இந்த முடிவு குறிப்பாக மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு நேரடி நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. இனி வீட்டிற்கு வாங்கும் மின்சாதனங்கள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தும் என்பதை முன்கூட்டியே தெளிவாக அறிந்து கொண்டு வாங்க முடியும். இதன் மூலம் மின்சார செலவைக் குறைக்கவும், பணச் சேமிப்பையும் செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.
2025 முடிந்து 2026 தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 1 முதல் சில புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது இந்த எரிசக்தி சேமிப்பு தொடர்பான அறிவிப்பு. மக்கள் இந்த விதிகளை அறிந்து கொண்டு செயல்பட்டால், தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும். குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த குடும்பங்களுக்கு இந்த மாற்றம் பொருளாதார ரீதியாக பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார் ரேட்டிங் கட்டாயம்
இனி மின்சாதனங்களை வாங்கும்போது அதில் அச்சிடப்பட்டுள்ள ஸ்டார் ரேட்டிங் லேபிள்-ஐ கவனிப்பது கட்டாயமாகிறது. பொதுவாக 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்கள் அதிக மின்சாரம் பயன்படுத்தும் நிலையில், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டவை குறைந்த மின்சாரத்தில் அதிக திறன் அளிக்கும். இந்த எரிசக்தி திறன் லேபிளிங் முறையை ஜனவரி 1, 2026 முதல் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான உத்தரவை Bureau of Energy Efficiency வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதியின் கீழ், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி, டிவி, டீப் ஃப்ரீசர், கூலிங் டவர்கள், சில்லர்கள், எல்பிஜி கேஸ் ஸ்டோவ், ஃப்ளோர் ஸ்டாண்டிங் ஏசி, கார்னர் ஏசி, சீலிங் ஏசி போன்ற பல பொருட்களுக்கு லேபிளிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில பொருட்களுக்கு மட்டுமே இந்த விதி இருந்தது, தற்போது மேலும் பல சாதனங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கு புதுப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தத்தில், இந்த புதிய விதி மின்சார சேமிப்பையும், நுகர்வோர் விழிப்புணர்வையும் அதிகரிக்கும் ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

