MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 போனஸ் & DA மே மாதத்தில்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 போனஸ் & DA மே மாதத்தில்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு மே மாதம் வழங்கப்பட உள்ளதாக தகவல். மே மாத மூன்றாவது வாரத்தில் அகவிலைப்படி மற்றும் போனஸ் சேர்த்து கணிசமான தொகை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : May 03 2025, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central government staff) மகிழ்ச்சியான செய்தி. கணிசமான தொகை விரைவில் கணக்கில் வரவு வைக்கப்படும். சந்தை விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்த்தப்படுகிறது. அதன்படி மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
DA Hike May 2025

DA Hike May 2025

அகவிலைப்படி உயர்வு எப்போது?

மோடி அரசு (Modi Government) 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளதாக தகவல். அகவிலைப்படி மற்றும் நிலுவைத் தொகையுடன் சேர்த்து 10,000 முதல் 18,000 ரூபாய் வரை ஊழியர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் (Group B, Group C, Group D employees) விரைவில் பயனடைவார்கள். எப்போது பணம் வரவு வைக்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

36
Central Government Employee

Central Government Employee

அகவிலைப்படி மற்றும் போனஸ்

மே (May) மாத மூன்றாவது வாரத்தில் அகவிலைப்படி மற்றும் போனஸ் சேர்த்து கணிசமான தொகை அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படலாம் என தகவல். 50 லட்சம் அரசு ஊழியர்கள் (Employees) மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் (Pension Holder) விரைவில் பயனடைவார்கள்.

46
DA Increase

DA Increase

மத்திய அரசு ஊழியர்கள்

அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய மற்றும் நவோதயா பள்ளி ஆசிரியர்கள், பாதுகாப்புத் துறை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பயனடைவார்கள். ஏழாவது ஊதியக் குழுவின் (Seventh Pay Commission) கீழ் 4% அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தகவல். இதன் மூலம் மாதம் 720 முதல் 3152 ரூபாய் வரை ஊழியர்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.

56
Govt staff salary hike

Govt staff salary hike

போனஸ் எவ்வளவு கிடைக்கும்?

இந்திய ரயில்வேயின் (Rail) சி பிரிவு ஊழியர்களுக்கு 7,000 ரூபாய் போனஸ் வழங்கப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை ஊழியர்களுக்கு 6800 முதல் 7000 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ஆசிரியர்களுக்கும் 7,000 ரூபாய் போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

66
Dearness Allowance update

Dearness Allowance update

அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் போனஸ்

தபால் துறை ஊழியர்களுக்கு 6900 முதல் 7100 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. அமைச்சக ஊழியர்களுக்கு 6500 முதல் 7000 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central government staff) இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. விரைவில் அவர்கள் பயனடைவார்கள். இந்த மாதமே கணிசமான தொகை அவர்களுக்கு கிடைக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அகவிலைப்படி உயர்வு
சம்பள உயர்வு
மத்திய அரசு
அரசு ஊழியர்கள்
இந்தியா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Related Stories
Recommended image1
வங்கி கணக்கில் 18 மாத DA நிலுவைத் தொகை வருது; எப்போது?
Recommended image2
அரசு ஊழியர்களுக்கு எதிர்பாரா சலுகையை அள்ளிக்கொடுத்த முதலமைச்சர்.! மீண்டும் கோரிக்கை வைத்த சங்கங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved