- Home
- Business
- சீனாவில் மிகப்பெரிய EV தொழிற்சாலையை உருவாக்கும் BYD – வீடியோ வெளியிட்டு கவனம் ஈர்த்த நிறுவனம்!
சீனாவில் மிகப்பெரிய EV தொழிற்சாலையை உருவாக்கும் BYD – வீடியோ வெளியிட்டு கவனம் ஈர்த்த நிறுவனம்!
BYD to build largest EV factory in Zhengzhou, China : சீனாவின் ஜெங்சோவில் BYD நிறுவனம் மிகப்பெரிய EV தொழிற்சாலையை உருவாக்கி வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

EV Cars, BYD Cars, BYD Cars in India
BYD to build largest EV factory in Zhengzhou, China : நாளுக்கு நாள் EVன் பயன்பாடும், தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக EV நிறுவனங்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சீனாவின் ஜெங்சோவில் BYD கட்டி வரும் மிகப்பெரிய அளவிலான EV தொழிற்சாலை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த EV தொழிற்சாலையானது அளவில் சன் பிரான்சிஸ்கோவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
BYD EV Cars in India, BYD EV Car, Zhengzhou
இந்த BYD தொழிற்சாலையானது 32,000 ஏக்கர் அல்லது தோராயமாக 50 சதுர மைல் பரப்பளவு கொண்டதாக இருக்கும். சீனாவின் EV உற்பத்தி நிறுவனமான BYD ஜெங்சோவில் தனது EV தொழிற்சாலையை விரிவுபடுத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சியில் உயரமான தங்கும் இடங்கள், உற்பத்தி வசதிகள், டென்னிஸ் மற்றும் கால்பந்து மைதானங்கள் மற்றும் பெரியளவிலான வளாகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், கட்டுமானம் தொடர்பான காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
Zhengzhou, China, China BYD EV Cars
தி சன் பத்திரிகையின்படி ஏற்கனவே 4.5 சதுர மைல் பரப்பளவு கொண்ட டெஸ்லாவின் நெவானா ஜிகா ஃபேகடரியை விட சீனாவின் ஜெங்சோவில் புதிதாக கட்டப்பட்டு வரும் EV தொழிற்சாலை 32,000 ஏக்கர் அல்லது தோராயமாக 50 சதுர மைல் பரப்பளவு கொண்டதாக இருக்கும். இது 46.9 சதுர மைல் பரப்பளவு கொண்ட சன் பிரான்சிஸ்கோ ஃபேக்டரியை விட பெரியது.
BYD EV Cars in India, BYD EV Car
8 பிரிவுகளாக கட்டப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையின் இறுதி 4 கட்டங்கள் தற்போது கட்டப்பட்டு வருகிறது. BYDல் மட்டும் 900,000 க்கும் மேற்பட்டவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடப்பு ஆண்டில் மட்டும் BYD நிறுவனமானது ஜெங்சோவில் 20000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
BYD Cars, BYD Cars in India
சீனாவின் ஜெங்சோ தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட முதல் வாகனமான சாங் ப்ரோ டிஎம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த மாடலின் விலை சந்தையில் ரூ.19.7 லட்சம் என்று கூறப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து EV உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 3.6 மில்லியன் EV வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் ஆண்டின் இறுதியில் EV வாகனங்களின் விற்பனையானது 4.25 மில்லியனாக அதிகரித்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
BYD, Electric Vehicle, EV Cars
இந்த நிலையில் தான் EV வாகனங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க இப்போது BYD நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் 5.25 மில்லியன் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.