எவ்வளவு சம்பளம் வாங்கியும் பத்தலயா.. பணத்தை இப்படி பட்ஜெட் போடுங்க! நோ கவலை!
எவ்வளவு சம்பளம் வந்தாலும், மாதக் கடைசியில் பணம் மிஞ்சுவதில்லை என்பது பலரின் பொதுவான புலம்பல். சம்பளத்தைச் சரியாகத் திட்டமிட்டால், நிதி நெருக்கடிகள் ஏற்படாது. சிறந்த சம்பளத் திட்டமிடல் குறித்த வழிகாட்டியை இங்கே காணலாம்.

எவ்வளவு சம்பளம் வாங்கியும் பத்தலயா.. பணத்தை இப்படி பட்ஜெட் போடுங்க! நோ கவலை!
சரியான திட்டமிடல் இருந்தால், குறைந்த சம்பளத்திலும் நிதி நெருக்கடிகள் இல்லாமல் வாழலாம். அனைத்துத் தேவைகளுக்கும் ஏற்பச் செலவுகளைப் பிரித்துக் கொடுத்தால், எதிர்கால நிதித் தேவைகளுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படாது. உதாரணமாக, உங்களுக்கு மாதம் ரூ. 40,000 சம்பளம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சம்பளத்தை எவ்வாறு திட்டமிடுவது என்பதை இப்போது பார்க்கலாம்.
சம்பளம்
ரூ. 40,000 சம்பளம் என்றால், வீட்டு வாடகை உங்கள் சம்பளத்தில் 30% (ரூ. 12,000) மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவு, மளிகைப் பொருட்களுக்கு 15% (ரூ. 6,000) ஒதுக்க வேண்டும். போக்குவரத்து போன்ற செலவுகளுக்கு 10% (ரூ. 4,000) ஒதுக்க வேண்டும். மின்சாரம், வைஃபை, மொபைல், எரிவாயு, தண்ணீர் போன்றவற்றுக்கு 5% (ரூ. 2,000) ஒதுக்க வேண்டும். மருத்துவம், காப்பீட்டுக்கு 5% (ரூ. 2,000) ஒதுக்க வேண்டும்.
வரவு செலவு - பட்ஜெட்
சொந்தச் செலவுகளுக்கு 10% (ரூ. 4,000) ஒதுக்கலாம். கிரெடிட் கார்டு செலவுகளுக்கு 5% (ரூ. 2,000) ஒதுக்க வேண்டும். சேமிப்புக்கு 20% (ரூ. 8,000) ஒதுக்க வேண்டும். இதனைப் பங்குகள், ஓய்வூதியத் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அவசர நிதிக்கு 5% (ரூ. 2,000) ஒதுக்க வேண்டும்.
ரூ.1499க்கு விமானப் பயணம்.. பஸ் டிக்கெட் விலைக்கு தரும் ஏர் இந்தியா!