பள்ளி விடுமுறையா?! குறைந்த செலவில் ஊர் சுற்றலாம்! – TNSTC ஆப் கை கொடுக்கும்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) வெளியிட்டுள்ள ஆன்லைன் ஆப் மூலம் குறைந்த செலவில் எளிதில் டிக்கெட் புக் செய்யலாம். இந்த ஆப்பில் இருக்கைத் தெரிவு, கேன்சல் வசதி, பேக்கேஜ் புக்கிங், சலுகைகள் போன்ற பல வசதிகள் உள்ளன.

TNSTC ஆன்லைன் ஆப்
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) வெளியிட்டுள்ள ஆன்லைன் ஆப், குறைந்த செலவில் எளிதில் டிக்கெட் புக் செய்ய உதவுகிறது. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலைமையைத் தவிர்க்க இந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்தலாம். முதலில், உங்கள் மொபைல் போனில் ப்ளேஸ்டோரில் “TNSTC” என்ற பெயரில் ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். ஆப்பை திறந்து தமிழ் அல்லது ஆங்கிலம் என விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து, பெயர், மொபைல் எண், மெயில் ஐடி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து லாகின் ஐடி உருவாக்கிக் கொள்ளலாம். பாஸ்வேர்டும் செட் செய்ததும், அனைத்து வகை அரசுப் பேருந்துகளுக்கும் (ஏசி, ஸ்லீப்பர், டீலக்ஸ்) ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய முடியும்.
டிக்கெட் புக்கிங் செய்வது எளிது
‘Ticket Booking’ ஆப்ஷனை தேர்வு செய்து புறப்படும் இடம், செல்விடத்தை குறிப்பிடுங்கள். பயண தேதியைத் தெரிவித்து Search பண்ணினால் பேருந்துகள் பட்டியல் வருகிறது. நீங்கள் விரும்பும் வகை பேருந்தையும் இருக்கையையும் தேர்வு செய்யலாம். பெண் பயணிகளுக்கு ‘Single Lady Ticket’ எனும் ஆப்ஷன் உள்ளது. நேரம், விலை போன்றவற்றில் Filter செய்து தேவைபோல் தேர்வு செய்ய வசதி உள்ளது.
இருக்கை தெரிவும் வசதி
இருக்கைகள் நிறங்களால் வேறுபடுத்தப்பட்டிருக்கும் – சாம்பல் நிறம் காலியிருக்கும் இருக்கைகள், ஊதா நிறம் ஏற்கனவே புக் செய்யப்பட்டவை, ஆரஞ்சு நிறம் பெண்களுக்கான ஒதுக்கீடு, வாடாமல்லி மாற்றுத்திறனாளிகளுக்கானவை. பெண் பயணிகள் பாதுகாப்புடன் இருக்கை தேர்வு செய்யலாம். ஒரு பேருந்தில் 4 இருக்கைகள் பெண்களுக்கு, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
டிக்கெட் கேன்சல் மற்றும் ரிப்பண்ட்
பயணம் கைவிட வேண்டுமானால், ‘Cancel’ ஆப்ஷனை கிளிக் செய்து Full அல்லது Partial ரத்துசெய்யலாம். பி.என்.ஆர்., மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து வரும் OTPயை உள்ளிடவும். கட்டணம் குறைந்தது பிடித்துக் கொள்ளப்பட்டு மீதி தொகை ஐந்து நாள்களில் வங்கியில் வரவு சேர்க்கப்படும். பணம் வரவில்லை எனில் Refund Status ஆப்ஷனை செக் செய்யலாம்.
பேக்கேஜ் புக்கிங் மற்றும் சலுகைகள்
பேக்கேஜ் புக்கிங் மூலம் ஒரே பேருந்தில் திரும்பவும் வர டிக்கெட் புக் செய்யலாம். இதற்கு 10% கட்டண சலுகையும் உண்டு. பத்து பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் குழுவாக டிக்கெட் புக் செய்தால் கூடுதல் சலுகை கிடைக்கும். கேன்சர் மற்றும் ஹெச்.ஐ.வி. நோயாளிகளுக்கும் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிறந்த பயண அனுபவத்துக்கு
பயணத்துக்கு முன் டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து கொள்ளவும். பதிவு செய்த அடையாள ஆவணத்தை எடுத்துச் செல்லவும். நீங்கள் வழங்கிய மொபைல் எண்ணுக்கு பேருந்து விபரங்கள் வரும், அதனால் அந்த எண் செயலிலிருப்பதை உறுதி செய்யவும்.