MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பட்ஜெட்: காலி பெருங்காய டப்பா..! தமிழகத்துக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஏமாற்றம்தான்..! புட்டு புட்டு வைக்கும் நிபுணர்கள்..!

பட்ஜெட்: காலி பெருங்காய டப்பா..! தமிழகத்துக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஏமாற்றம்தான்..! புட்டு புட்டு வைக்கும் நிபுணர்கள்..!

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், மத்திய பட்ஜெட் விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பை புறக்கணித்து, வெற்று அறிவிப்புகளுடன் இருப்பதாக விமர்சித்துள்ளார். இந்த பட்ஜெட் யாருக்கும் பயனளிக்காத ஒன்று என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 01 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
"எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை"
Image Credit : ANI

"எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை"

2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட் குறித்துப் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முன்வைத்துள்ள கருத்துக்கள், சாமானிய மக்கள் மற்றும் தமிழகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதையே காட்டுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திட்டமில்லாத பட்ஜெட் உரை
Image Credit : X

திட்டமில்லாத பட்ஜெட் உரை

இந்த பட்ஜெட் குறித்துப் பேசிய பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், இது ஒரு நாட்டின் நிதியமைச்சர் ஆற்ற வேண்டிய உரையைப் போல் இல்லை என்று சாடியுள்ளார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி மேலோட்டமாகத் தயாரித்த அறிக்கையை வாசிப்பது போலவே இந்த உரை அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஒன்றரை மணி நேர பட்ஜெட் உரையில் நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களோ, உத்வேகம் அளிக்கும் அறிவிப்புகளோ இடம்பெறவில்லை என்பது அவரது முக்கியக் குற்றச்சாட்டாகும்.

35
விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு புறக்கணிப்பு
Image Credit : X

விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு புறக்கணிப்பு

இந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயத் துறையில் பெரும் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னை வளர்ப்பது, சந்தன மரங்களை நடுவது போன்ற மேலோட்டமான கருத்துக்களைக் கூறிவிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் அறிவித்துவிட்டு நிதியமைச்சர் கடந்து சென்றுவிட்டதாக ஆனந்த் சீனிவாசன் விமர்சித்துள்ளார். அதேபோல், இந்தியாவில் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கட்டுமானத் துறை குறித்து எவ்வித உருப்படியான அறிவிப்புகளும் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக அவர் தெரிவித்தார். பட்ஜெட் உரைக்கு முன்பாக நம்பிக்கையுடன் இருந்த பங்குச்சந்தை, உரையின் உள்ளடக்கத்தைப் பார்த்தவுடன் சரிவைச் சந்தித்ததே இதற்குச் சாட்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

45
தமிழகத்தின் நிலை.! வாக்குறுதிகளும் எதார்த்தமும்.!
Image Credit : X

தமிழகத்தின் நிலை.! வாக்குறுதிகளும் எதார்த்தமும்.!

தமிழகத்தின் நிலை: வாக்குறுதிகளும் எதார்த்தமும்தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - ஐதராபாத் அதிவிரைவு ரயில் திட்டங்கள், ஆதிச்சநல்லூர் தொல்லியல் சுற்றுலாத் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது கேள்விக்குறியே என்கிறார் ஆனந்த் சீனிவாசன். "மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தையே இன்னும் முடிக்க முடியவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் இன்னும் கட்டுமானத்திலேயே உள்ளது. நிலைமை இப்படி இருக்க, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள் அடுத்த 15 ஆண்டுகளுக்குள் வருமா என்பது சந்தேகம் தான்" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

55
புள்ளிவிவரப் போர் மற்றும் எதிர்காலக் கனவு
Image Credit : X

புள்ளிவிவரப் போர் மற்றும் எதிர்காலக் கனவு

மத்திய அரசு அறிவித்துள்ள ஜிடிபி (GDP) புள்ளிவிவரங்கள் தவறானவை என்று சர்வதேச நிதியமே (IMF) சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரசு 7.5% வளர்ச்சி என்று கூறினாலும், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் போன்றவர்கள் உண்மையான வளர்ச்சி 2% மட்டுமே என்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டிற்கான திட்டங்களை விட, அடுத்த 5 ஆண்டுகளில் செமி கண்டக்டர் மற்றும் மருத்துவச் சுற்றுலாத் துறையில் என்ன செய்வோம் என்ற எதிர்காலக் கனவுகளே அதிகம் காணப்படுகின்றன.

மொத்தத்தில், இந்த பட்ஜெட் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற முழக்கத்துடன் தொடங்கினாலும், நடைமுறையில் யாருக்கும் எந்தப் பயனும் தராத ஒரு "காலி பெருங்காய டப்பாவாக" மாறிவிட்டது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அறிவிப்புகள் காகிதத்தில் கவர்ச்சியாக இருந்தாலும், அவை செயல்பாட்டுக்கு வருமா என்பதில் பெரும் ஐயப்பாடு நிலவுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பட்ஜெட் 2026
வணிகம்
வணிக யோசனை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DMart Shopping: டிமார்ட்டில் மளிகை சாமான் வாங்குறீங்களா? இதையெல்லாம் மொத்தமா வாங்குனா காசு வேஸ்ட்!
Recommended image2
நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.! ஜிஎஸ்டி முதல் மொபைல் அழைப்புகள் வரை 5 புதிய விதிகள் – முழு விவரம்!
Recommended image3
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Related Stories
Recommended image1
Budget 2026: எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியதா 2026 பட்ஜெட்?! நீங்க எவ்ளோ வரி கட்டனும் தெரியுமா?
Recommended image2
Budget 2026: கல்விக் கடன் சுமை இனி பாதியாக குறையும்! மருத்துவ மாணவர்களுக்கு மெகா சலுகை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved