- Home
- Business
- Budget 2026: எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியதா 2026 பட்ஜெட்?! நீங்க எவ்ளோ வரி கட்டனும் தெரியுமா?
Budget 2026: எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியதா 2026 பட்ஜெட்?! நீங்க எவ்ளோ வரி கட்டனும் தெரியுமா?
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, இது சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் வரிச் சேமிப்பைத் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது.

சம்பளதாரர்கள் என்ன செய்ய போகிறார்கள்?!
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். கடந்த சில வாரங்களாகவே, "இந்த முறை வருமான வரி உச்சவரம்பு உயரும், நடுத்தர வர்க்கத்திற்கு பெரிய நிம்மதி கிடைக்கும்" எனப் பேசப்பட்டு வந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த பட்ஜெட் தவிடு பொடியாக்கியுள்ளது. தனிநபர் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால், வரி செலுத்துவோர் அதிர்ச்சியில் உள்ளனர். புதிய வரி விதிப்பு முறையின் கீழ், வருமான வரி விலக்கு உச்சவரம்பு கடந்த ஆண்டைப் போலவே தொடர்கிறது.
என்ன நடந்தது? - ஒரு பார்வை
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, சம்பளம் வாங்குபவர்களின் கண்கள் வருமான வரிப் பக்கத்தையே தேடும். குறிப்பாக, உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வரிச் சலுகை கிடைக்கும் எனப் பலரும் நம்பியிருந்தனர். ஆனால், நிதியமைச்சர் பழைய வரி விகிதங்களையே இந்த ஆண்டும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
நீங்க எவ்ளோ வரி கட்டணும்? (புதிய வரி விதிப்பு முறை)
உங்கள் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதைக் கீழே உள்ள அட்டவணை மூலம் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.!
ஆண்டு வருமானம்வரி விகிதம் (%)
ரூ. 4 லட்சம் வரை0% (வரி இல்லை)
ரூ. 4 லட்சம் - ரூ. 8 லட்சம் 5%
ரூ. 8 லட்சம் - ரூ. 12 லட்சம் 10%
ரூ. 12 லட்சம் - ரூ. 16 லட்சம் 15%
ரூ. 16 லட்சம் - ரூ. 20 லட்சம் 20%
ரூ. 20 லட்சம் - ரூ. 24 லட்சம் 25%
ரூ. 24 லட்சத்திற்கு மேல் 30%
இது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பின்னடைவா?
விலைவாசி உயர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் வரி வரம்பில் மாற்றம் இல்லாதது நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பைக் குறைக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 80C முதலீடுகள் அல்லது வீட்டுக் கடன் வட்டியில் கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. அரசு 'புதிய வரி முறையை' நோக்கி மக்களைத் தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறது என்பதை இந்த பட்ஜெட் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்து என்ன?
வரி வரம்பில் மாற்றம் இல்லாவிட்டாலும், உங்கள் வருமானத்தை எப்படிச் சரியாகத் திட்டமிட்டு வரிச் சேமிப்பைப் பெறுவது என்பதை இப்போதே யோசிக்க வேண்டியது அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

