வருமான வரி 2026: சம்பளதாரர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் புதிய சர்ப்ரைஸ்?
பட்ஜெட் 2026-ல் சம்பளதாரர்கள் வருமான வரி சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு பட்ஜெட் 2025-ல் ரூ.12.75 லட்சம் வரை வரிவிலக்கு போன்ற முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

சம்பளதாரர்கள் வரி அப்டேட்
பட்ஜெட் 2026 இன்னும் சில நாட்களில் வெளியாகும் நிலையில், நாடு முழுவதும் உள்ள சம்பளதாரர்கள் மற்றும் வரிவிதிப்பு செலுத்தும் மக்கள் மீண்டும் வருமான வரியில் கூடுதல் சலுகைகள் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு செலவழிக்கும் திறனை உயர்த்தும் நோக்கில் அரசு வரி விகிதங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2025-ல் அறிவித்த வருமான வரி சலுகைகள் மத்திய தர மக்களுக்கு ஒரு பரிசு போலவே அமைந்தது.
புதிய வரி முறை 2026
அதிக கவனம் பெற்ற முக்கிய அறிவிப்பு என்னவென்றால், மாத ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை என்பதே. மேலும் சம்பளதாரர்களுக்கு ரூ.75,000 ஸ்டாண்டர்ட் டெடக்ஷன் சேர்த்தால், வரிவிலக்கு வரம்பு ரூ.12.75 லட்சம் வரை உயர்கிறது. இதன் மூலம் பல நடுத்தர குடும்பங்கள் நேரடியாக பெரிய நிம்மதியை பெற்றன. அதே போல் புதிய வரி முறையில் வரி ஸ்லாப்கள் மாற்றப்பட்டது, பலருக்கும் வரி கணக்கீடு எளிதாக மாறியது.
வருமானவரி சலுகை 2026
மேலும் அரசின் புதிய வருமான வரி சட்டம் (வருமான வரி மசோதா 2025) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் சட்ட மொழியை எளிமையாக்குவது, காலாவதியான விதிகளை நீக்குவது மற்றும் வரி அமைப்பை சீரமைப்பது என அறியப்படுகிறது. இதோடு TDS விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாடகை வருமானத்துக்கான TDS வரம்பு ரூ.2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்களின் வட்டி வருமான வரிவிலக்கு ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.
வருமான வரி மசோதா
மேலும் ITR(U) தொடர்பாக, இப்போது மக்கள் 4 ஆண்டுகள் வரை அப்டேட்டட் ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்; முன்பு இது 2 ஆண்டுகள் தான். இப்போது அனைவரின் கேள்வி ஒன்று... பட்ஜெட் 2026-ல் இன்னும் வருமானம் குறையுமா? ஆனால் பொருளாதார நிபுணர்கள் கருத்துப்படி பெரிய மாற்றங்கள் வர வாய்ப்பு குறைவு. இருப்பினும் பணவீக்கம், வாழ்வுச் செலவு போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறிய ஸ்லாப் மாற்றங்கள் செய்தால் அது பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். இந்தாண்டு அரசு வரி எளிமைப்படுத்தல் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் திட்டங்களை முன்னிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

