MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மருத்துவ செலவால் தவிக்கும் இந்திய மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு

மருத்துவ செலவால் தவிக்கும் இந்திய மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு

2026 மத்திய பட்ஜெட்டில், 17 வகை புற்றுநோய் மருந்துகள் மற்றும் பிற தீவிர நோய்களுக்கான மருந்துகளின் விலையைக் குறைக்க அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் மருத்துவச் செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 01 2026, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புற்றுநோய் மருந்து விலை குறைப்பு
Image Credit : Google

புற்றுநோய் மருந்து விலை குறைப்பு

2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் சுகாதாரத் துறையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, பொதுமக்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்திய தீவிர நோய்களுக்கான மருந்துகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. புற்றுநோய் தொடர்பான 17 வகை மருந்துகள் மற்றும் பிற ஏழு தீவிர நோய்களுக்கான மருந்துகளின் விலை குறைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, உயிர் காக்கும் சிகிச்சைகளை அதிகமான மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நோயாளிகளுக்கு நிவாரணம்
Image Credit : ss https://www.indiabudget.gov.in/

நோயாளிகளுக்கு நிவாரணம்

இந்தியாவை “உலகளாவிய உயிர்-மருந்து மையமாக” மாற்றுவதே மத்திய அரசின் நீண்டகால இலக்கு என நிதியமைச்சர் தெரிவித்தார். புற்றுநோய், நீரிழிவு மற்றும் இம்யூன் நோய்கள் போன்ற நீண்டகால மற்றும் அதிக செலவு சிகிச்சைகள் தேவைப்படும் நோய்களுக்கு, இனி மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் உறுதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம், வெளிநாட்டு மருந்துகளின் மீதான சார்பும், குடும்பங்களின் மருத்துவச் செலவும் குறையும் என அரசு நம்புகிறது.

Related Articles

Related image1
இந்த 10 அறிவிப்புகள் இந்தியாவை மாற்றப்போகுது.. பட்ஜெட் 2026-ன் முக்கிய அம்சங்கள்
Related image2
Budget 2026: எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியதா 2026 பட்ஜெட்?! நீங்க எவ்ளோ வரி கட்டனும் தெரியுமா?
34
மலிவு விலை சிகிச்சை
Image Credit : GeminiAI

மலிவு விலை சிகிச்சை

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு தொற்றா நோய்களுக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும், உயிர்-மருந்து மற்றும் உயிரியல் உற்பத்தியில் இந்தியாவை உலக அளவில் முன்னணியில் நிறுத்தவும் உதவும். இதன் பயனாக, மருந்து விலை குறைவதோடு, உள்ளூர் உற்பத்தியும் வேகமாக அதிகரிக்கும்.

44
ஆட்டோ இம்யூன் நோய்கள்
Image Credit : Asianet News

ஆட்டோ இம்யூன் நோய்கள்

ஆட்டோ இம்யூன் நோய்கள் என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தவறுதலாக தன் சொந்த செல்களைத் தாக்கும் நிலை ஆகும். முடக்கு வாதம், சொரியாசிஸ், லூபஸ், வகை 1 நீரிழிவு போன்ற நோய்கள் இதில் அடங்கும். தற்போது நோய்களுக்கான மருந்துகள் மற்றும் உயிரியல் ஊசிகள் அதிக விலை கொண்டவை. 2026 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் அமலுக்கு வந்தால், இந்த மருந்துகளின் விலை குறைந்து, லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யூனியன் பட்ஜெட்
2026 யூனியன் பட்ஜெட்
பட்ஜெட் 2026
மருத்துவம்
வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
Recommended image2
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்
Recommended image3
Now Playing
Gold Rate Today | காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! மேலும் குறையுமா?
Related Stories
Recommended image1
இந்த 10 அறிவிப்புகள் இந்தியாவை மாற்றப்போகுது.. பட்ஜெட் 2026-ன் முக்கிய அம்சங்கள்
Recommended image2
Budget 2026: எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியதா 2026 பட்ஜெட்?! நீங்க எவ்ளோ வரி கட்டனும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved