மத்திய பட்ஜெட் 2025: வருமான வரி அடுக்கு மாறுதா? வரிச் சலுகை யாருக்கு?
Budget 2025 income tax relief: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் 30% வரிக்கான வருமான வரி வரம்பை அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி அடுக்குகளிலும் சீரான மாற்றம் தேவை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Income Tax Slabs in India
மததஇய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8வது மத்திய பட்ஜெட்டில் 30% வரிக்கான வருமான வரி வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வரி அடுக்குகளில் சீரான மாற்றம் தேவை என்றும் வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
30% வருமான வரி வரம்பை ரூ.18 லட்சமாக உயர்த்துதல், வரி அடுக்கை மறுசீரமைத்தல் ஆகிய மாற்றங்களைச் செய்வது மிகவும் முக்கியம் என அவர்கள் கூறுகின்றனர்.
Nirmala Sitharaman Budget 2025
"செலவு பணவீக்கக் குறியீட்டில் 21% அதிகரித்த போதிலும், 2020 முதல் 30% வருமான வரி வரம்பு ரூ.15 லட்சமாகவே உள்ளது. பணவீக்கத்தை சமாளிக்கும் விதமாக இந்த வரம்பை ரூ.18 லட்சமாக உயர்த்த வேண்டும். இது சம்பளம் பெறும் நகர்ப்புற மக்களுக்கு நிவாரணமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த மாற்றம் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் வருமான வரி சுமையையும் குறைக்கும்.
Income Tax Slab Change
வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிப்பது குறித்தும் பொருளாதார வல்லுநர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர். வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்தலாம். ஆனால், அது அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிச்சுமையை அதிகரிக்கும்.
Tax slabs
வருமான வரி அடுக்கில் மாற்றம் செய்வது ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமானதாக இருக்கக் கூடாது. மாற்றம் அனைத்து வருமான வரி அடுக்குகளிலும் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 2023-24 நிதியாண்டு புள்ளிவிவரங்களின்படி, வரி செலுத்துவோரில் 2% பேர் மட்டும் மொத்த வருமான வரியில் 77% ஐ செலுத்துகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
Long-term savings
நீண்ட கால சேமிப்பு மற்றும் காப்பீட்டுகளை எடுப்பது குறைந்து வருவது பற்றியும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புதிய வருமான வரி முறையில் விலக்குகள் இல்லாததால், அத்தியாவசிய நிதிப் பாதுகாப்புகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. ஆயுள் காப்பீட்டுகளை எடுப்பது குறைந்து வருகிறது. வலுவான ஈக்விட்டி செயல்திறன் இருந்தாலும், ELSS முதலீடுகள் குறைந்து வருகின்றன.
30% flat deduction on gross income
குறைவான சம்பளம் பெறுபவர்கள் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறைவாகவே உள்ளது. பொருளாதார மந்தநிலை இந்தப் போக்குகளுக்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே, சேமிப்பு மற்றும் வரி விலக்குகள் தொடர வேண்டும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள்.