வரலாறு காணாத உச்சத்தில் பிட்காயின்! 89,000 டாலர்களைத் தாண்டியது! ட்ரம்ப் வெற்றி எதிரொலியா?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வென்றதை அடுத்து, அவரது ஆட்சியில் கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவான கொள்கை மாற்றங்கள் வரும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில், பிட்காயின் வர்த்தகம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, 89,000 டாலர்களைத் தாண்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வென்றதை அடுத்து, அவரது ஆட்சியில் கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவான கொள்கை மாற்றங்கள் வரும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில், பிட்காயின் வர்த்தகம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, 89,000 டாலர்களைத் தாண்டியுள்ளது. நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற செய்தி வெளியானதை அடுத்து பிட்காயின் 30% உயர்வு கண்டுள்ளது.
முன்னதாக கிரிப்டோகரன்சி விமர்சகராக இருந்த டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தார்.
அமெரிக்க காங்கிரஸில் அவரது குடியரசுக் கட்சி வலுவாக இருப்பது கிரிப்டோகரன்சி தொடர்பான கொள்கைகள் மாற்றங்கள் குறித்த நம்பிக்கையை தூண்டுகிறது. டிரம்பின் திட்டங்களில் அமெரிக்க பிட்காயின் இருப்பு மற்றும் உள்நாட்டு கிரிப்டோ வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகியவையும் உள்ளன. இது ஜோ பிடனின் ஆட்சியின் அணுகுமுறையிலிருந்து பெரிதும் மாறுபட்டதாகப் பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் வெற்றி பெற்றது டிஜிட்டல் சொத்து சந்தைக்கு புத்துயிர் அளித்துள்ளது. CoinGecko கிரிப்டோ சொத்துக்களின் கூட்டு மதிப்பு இப்போது சுமார் 3.1 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதற்கிடையில், பெரிய பிட்காயின் வைத்திருக்கும் நிறுவனங்கள் இரட்டிப்பாகும். MicroStrategy, கிரிப்டோ வர்த்தகத்தில் முக்கிய கார்ப்பரேட் முதலீட்டாளராக உள்ளது. இந்நிறுவனம் அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை சுமார் 2 பில்லியன் டாலருக்கு 27,200 பிட்காயின்களை வாங்கியுள்ளது.