ATM Card பயன்பாடு: யாரும் நெருங்கி வந்தால் விலகி நில்லுங்கள்!
ATM-ல் பணம் எடுக்கும்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை இந்தக் கட்டுரை வழங்குகிறது. PIN எண்ணைப் பாதுகாத்தல், பரிவர்த்தனைக்கு பிறகு கார்டை மறக்காமல் எடுத்து செல்லுதல் போன்ற முக்கியமான நடவடிக்கைகளை விளக்குகிறது.

திருடப்படும் வாடிக்கையாளர்கள் பணம்
UPI பண பரிவர்த்தனை அதிகரித்துள்ள போதிலும் ஏடிஎம் செல்லும் சூழலும் நமக்கு தேவையாகவே உள்ளது. வாடிக்கையாளர்களின் கவனக்குறைவை பயன்படுத்தி ATM செல்வோரின் பணம் திருடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏடிஎம் செல்லும் போது நாம் சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏ.டி.எம் பயன் படுத்துவதில் இன்னமும் சில தவறுகளைப் பலர் செய்கிறார்கள் என்றும் அவற்றைத் தவிர்த்து, உங்கள் பணத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்
ஏ.டி.எம் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை
ஏ.டி.எம்மில் (ATM) பணம் எடுக்கலாம், பேலன்ஸ் பார்க்கலாம், பல சேவைகள் செய்யலாம். ஆனால் சில விஷயங்களை தெரிந்துகொண்டு மட்டும் பயன்படுத்தினால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.முதலில், ஏ.டி.எம் உள்ள இடத்தை நல்லா பார்த்து, சுத்தமாக இருக்கிறதா, யாரும் சந்தேகமாக நின்றிருக்கிறார்களா என கவனிக்கவும். எப்போதும் காமிரா இருக்கும், பாதுகாப்பு இருக்கும் ஏ.டி.எம்மை தேர்ந்தெடுக்கவும்.
பின் நம்பர் பாதுகாப்பு மிகவும் முக்கியம்
ஏ.டி.எம் பின் நம்பரை (PIN Number) உள்ளிடும் போது கையால் கீ-பேட்டை மூடுங்கள். அருகிலிருந்தவர்கள் உங்கள் நம்பர் பார்க்கக்கூடாது. அதிக நெருக்கமாக நின்றால் கூட யாரும் பார்க்கும் வகையில் பின் நம்பரை அமுக்க வேண்டாம்.
பரிவர்த்தனை முடித்ததும் மறக்காமல் எடுத்து செல்லுங்கள்
பணத்தை பார்த்ததும் அவசரப்பட்டு கார்டை எடுக்காமல் அங்கேயே விட்டுவிடாதீர்கள். பணத்தையும், கார்டையும் வெளியே எடுத்த பிறகே நாம் வெளியேற வேண்டும். டெபிட் கார்டை மெஷினில் இருந்து மறக்காமல் எடுத்து செல்லும் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.
மொபைல் எஸ்.எம்.எஸ் முக்கியம்
எப்போதும் உங்கள் மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் அலர்ட் (SMS Alert) வரும் மாதிரி வைத்திருங்கள். பண பரிவர்த்தனை ஆனதும், உங்களுக்கு மொபைலில் தகவல் வந்தா சரி. வரவில்லை என்றால் உடனே வங்கி கிளைக்கு சென்று விசாரியுங்கள்.
பின் நம்பர் எப்போதும் ரகசியம்
பின் நம்பரை யாரிடமும் சொல்லாதீர்கள், உங்கள் நெருங்கியவர்களுக்கும். எதையுமே நம்பி கார்டில் எழுதிப்போடாதீர்கள். உங்கள் பின் நம்பரை பத்திரமாக மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் நம்பர் மாற்றம்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பின் நம்பரை மாற்றுங்கள். இது பாதுகாப்புக்கு நல்லது.
சந்தேகம் இருந்தால் உடனே வங்கி தொடர்பு
கார்டு தொலைந்தால், அல்லது ஏதாவது சந்தேகமானது நடந்தால் உடனே வங்கியை அழைத்து கார்டை பிளாக் செய்ய சொல்லுங்கள்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
யாரிடமும் பின் நம்பர் பகிர வேண்டாம்
கார்டை எந்த நேரமும் மெஷினில் விட்டுவிடாதீர்கள்
எப்போதும் எஸ்எம்எஸ் அலர்ட் வருகிறதா பாருங்கள்
சந்தேகமான சூழல் என்றால் பயன்படுத்தாதீர்கள்