2026ல் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு!
புல்கேரிய ஜோதிடர் பாபா வங்காவின் கணிப்பின்படி, 2026ல் தங்கம் விலை வானளவு உயரும் என விவாதிக்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாகவும், அதே சமயம் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் பற்றி பாபா வங்கா
2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை வானளவு உயரும் என புல்கேரிய ஜோதிடர் பாபா வங்காவின் கணிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும் சூழலில் தங்கம் மீண்டும் பாதுகாப்பான முதலீடாக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை
சமீபத்தில் தங்கம் விலை உச்சத்தை எட்டிய பின் சில நாட்களில் ரூ.1,836 வரை வீழ்ச்சி கண்டது. ஆனால் வரவிருக்கும் நிதி நெருக்கடி காலத்தில் தங்கம் மீண்டும் உயர்வடையும் என கூறப்படுகிறது. கடந்த மந்த நிலையில் தங்கம் 50% வரை உயர்ந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
பாபா வங்காவின் கணிப்பு
நிபுணர்கள் கணிப்பின் படி, 2026 தீபாவளிக்குள் தங்கம் 25%–40% வரை உயரலாம். இதனால் 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.1.62 லட்சம் முதல் ரூ.1.82 லட்சம் வரை செல்ல வாய்ப்பு உண்டு. உலகளாவிய வர்த்தக நெருக்கடி, பணவீக்கம் மற்றும் வங்கி நெருக்கடிகள் இதற்குக் காரணமாகும்.
2026ல் தங்கம் விலை
முதலீட்டாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை சிக்னல். தங்கம் நீண்ட காலத்தில் பாதுகாப்பான சொத்தாக இருந்தாலும், திடீர் உயர்வு பின்பு சரிவு ஏற்படும் அபாயமும் உண்டு. ஆகவே பொருளாதார அடிப்படைகளையும் சந்தை தரவுகளையும் கண்காணித்து முதலீடு செய்வது அவசியம்.