தங்கத்தை இப்போது வாங்கலாமா? விற்கலாமா? பாபா வாங்காவின் எச்சரிக்கை!
பாபா வாங்காவின் 2026 பொருளாதார நெருக்கடி கணிப்புடன் தங்க விலை உயர்வை இணைத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. பாபா வாங்கா முன்கணிப்புகள் கடந்த காலத்தில் பல முறை வைரலாகி உள்ளன.

தங்க விலை பற்றி பாபா வாங்கா கணிப்பு
சமீப நாட்களில் தங்க விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில் “பாபா வாங்கா தங்க விலை பற்றி முன்கணிப்பு சொன்னாரா? 2026-ல் தங்கம் மேலும் ஏறுமா? வாங்கலாமா, விற்கலாமா?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பாபா வாங்கா முன்கணிப்புகள் கடந்த காலத்தில் பல முறை வைரலாகி உள்ளன.
தங்க விலை கணிப்பு 2026
சில சம்பவங்கள் அவர் கூறியதாக சொல்லப்படும் கணிப்புகளுடன் ஒத்துப்போனதாக மக்கள் நம்புவதால், இப்போது தங்க விலை தொடர்பான “2026 பொருளாதார நெருக்கடி” பேசுபொருளாகியுள்ளது. உலகளவில் போர் பதற்றம், பொருளாதார குழப்பம், பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தை நோக்கி திரும்புவார்கள் என்பதே பொதுவான கருத்து.
தங்க விலை அதிரடி உயர்வு
இதனாலேயே தங்கம், வெள்ளி விலை ரெக்கார்ட் லெவல் அடைந்ததாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன் திடீர் சரிவு ஏற்பட்டால் சிலர் நஷ்டத்தை குறைக்க விற்றார்கள். மற்றவர்கள் “குறைந்த விலையில் வாங்கி லாபம் பார்க்கலாம்” என வாங்க முயன்றார்கள். ஆனால் தங்க விலை ஏற்ற இறக்கம் மிகவும் வேகமாக நடப்பதால், அனலிஸ்ட்களுக்கே உடனடி கணிப்பு கூறுவது கடினம் ஆகும்.
தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
இந்த நேரத்தில் “2026-ல் நிதி நெருக்கடி வந்தால் தங்கம் 25% முதல் 40% வரை உயரலாம்” என்ற தகவல்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. அதாவது தங்கம் ஒரு கட்டத்தில் ரூ.1.63 லட்சம் முதல் ரூ.1.82 லட்சம் வரை (10 கிராம்) செல்லலாம் என்ற கணிப்புகளும் பேசப்படுகிறது. ஆனால் இதெல்லாம் அதிகாரப்பூர்வ பொருளாதார முன்னறிவிப்புகள் அல்ல என்பதால் அதை முழுமையாக நம்ப முடியாது.
தங்க விலை ஏற்ற இறக்கம்
நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், தங்க விலையை தீர்மானிப்பதில் வட்டி விகிதம், பணவீக்கம், வங்கி முடிவுகள், உலக அரசியல் பதற்றம் போன்ற பல காரணங்கள் முக்கியம். தங்கம் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான முதலீடு என்றாலும், வதந்திகளால் பதறி அதிகமாக முதலீடு செய்வது ஆபத்து. கடன் வாங்கி தங்கம் வாங்குவது அல்லது சொத்துக்களை விற்று பெரிய லாபம் எதிர்பார்ப்பது தவிர்க்கவும். சிறிய தொகையாக தொடர்ந்து முதலீடு செய்து, தேவையெனில் சந்தை நிபுணர்களின் ஆலோசனையுடன் முடிவு எடுப்பதே சிறந்த வழியாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

