Gold Rate Today:ரூ.76 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.! தங்கமே உனக்கு என்ன ஆச்சு.?!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.9470 ஆகவும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.75,760 ஆகவும் உள்ளது. வெள்ளி விலையும் சிறிது உயர்ந்துள்ளது. சர்வதேச நிலவரம் மற்றும் அமெரிக்காவுடனான உறவைப் பொறுத்து விலை மாறக்கூடும்.

வெள்ளிக்கிழமை அதிகரித்த தங்கம்.!
சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி சிறிது அதிகரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடத்த வர்க்கத்தினரும், திருமணம் உள்ளிட்ட விசேஷம் வைத்துள்ளவர்களும் கவலை அடைந்துள்ளனர். இருந்த போதிலும் வரலெட்சுமி விரதம் மற்றும் வெள்ளிக்கிழமை செண்டிமென்டால் விற்பனை குறையவில்லை என நகை கடை வைத்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பாடி ஒருவாரமாக உயர்ந்த தங்கம்.!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ரூ.9470 வாக உள்ளது. சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 75,760 ரூபாயாக உள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை 76 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 126 ரூபாயாகவும், 1 கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.
வரும் வாரத்தில் இப்படி இருக்கும்.!
சர்வதேச நிலவரம், அமெரிக்காவுடனான உறவு போன்றவை இந்திய சந்தைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பில் தளர்வு போன்றவை அறிவிக்கப்படும் பட்சத்தில் தங்கம் விலை மீண்டும் சரிவடையும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.