MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஏடிஎம் மூலம் பணம் எடுப்பவர்களே உஷார்.. இனி கூடுதல் கட்டணம்.. முழு விபரம் இதோ!

ஏடிஎம் மூலம் பணம் எடுப்பவர்களே உஷார்.. இனி கூடுதல் கட்டணம்.. முழு விபரம் இதோ!

ஹெச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மற்றும் பந்தன் வங்கி போன்ற முக்கிய வங்கிகள் ஏப்ரல் 1, 2026 முதல் தங்களது ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 01 2026, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ATM பணம் எடுப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Image Credit : Asianet News

ATM பணம் எடுப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் பல முக்கிய வங்கிகள் தங்களது ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளன. குறிப்பாக, இலவச பரிவர்த்தனை வரம்பு, தினசரி பணம் எடுக்கும் வரம்பு மற்றும் கூடுதல் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படும்.

25
ATM இலவச வரம்பு குறைப்பு
Image Credit : Asianet News

ATM இலவச வரம்பு குறைப்பு

இந்த மாற்றங்களை ஹெச்டிஎப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பந்தன் வங்கி போன்ற வங்கிகள் அறிவித்துள்ளன. புதிய விதிகள் ஏடிஎம் ஆப் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

Related Articles

Related image1
இன்றே கடைசி..? ஏப்ரல் 1 முதல் PNB வங்கி கணக்கு முடக்கம்..? உடனே இதைச் செய்யுங்க..!
Related image2
ஏப்ரல் மாதத்தில் 14 நாட்கள் வங்கி மூடப்படும்.. முழு விடுமுறை லிஸ்ட் உள்ளே.!
35
கூடுதல் கட்டணம் அதிகரிப்பு
Image Credit : Asianet News

கூடுதல் கட்டணம் அதிகரிப்பு

ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, இனி UPI மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதும் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தனியாக கருதப்பட்ட இந்த சேவை, இப்போது சாதாரண ஏடிஎம் பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 5 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் வரிகள் வசூலிக்கப்படும்.

45
பஞ்சாப் நேஷனல் வங்கி
Image Credit : Asianet News

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பை குறைக்கிறது. முன்பு ரூ.1 லட்சம் வரை சில கார்டுகளில், இப்போது ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும். மேலும், பிரீமியம் கார்டுகளின் வரம்பு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.75,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பல RuPay, Visa மற்றும் Mastercard கார்டுகளுக்கு பொருந்தும். மற்றொரு புறம், பந்தன் வங்கி தனது இலவச பரிவர்த்தனை வரம்பை மாற்றியுள்ளது.

55
ஏடிஎம் பரிவர்த்தனை
Image Credit : social media

ஏடிஎம் பரிவர்த்தனை

அதன் ஏடிஎம்-களில் மாதத்திற்கு 5 இலவச நிதி பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன. பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் மெட்ரோ நகரங்களில் 3 மற்றும் பிற பகுதிகளில் 5 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே வழங்கப்படும். அதற்குப் பிறகு நிதி பரிவர்த்தனைக்கு ரூ.23, நிதியல்லாத சேவைகளுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்த இருப்பு காரணமாக பரிவர்த்தனை தோல்வியடைந்தால் ரூ.25 அபராதமும் விதிக்கப்படும். புதிய விதிகளை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் பண பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம்
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திர பரிவர்த்தனை விதிகள்
வங்கி
வங்கிக் கணக்கு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தினமும் 2GB டேட்டா.. 20GB போனஸ்.. ஆஃபர்களை வாரி வாரி வழங்கும் ஜியோ.!
Recommended image2
பரணி நட்சத்திரத்தில் அமரும் புதன்.! இந்த 5 ராசிகளுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி.! லாபம் கொட்டும்.! கோடீஸ்வர யோகம் கிட்டும்.!
Recommended image3
யுபிஐ, கார்டு பேமென்ட் விதிகள் மாற்றமா.. ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.. இதை தெரிஞ்சுக்கோங்க
Related Stories
Recommended image1
இன்றே கடைசி..? ஏப்ரல் 1 முதல் PNB வங்கி கணக்கு முடக்கம்..? உடனே இதைச் செய்யுங்க..!
Recommended image2
ஏப்ரல் மாதத்தில் 14 நாட்கள் வங்கி மூடப்படும்.. முழு விடுமுறை லிஸ்ட் உள்ளே.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved