MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஏடிஎம் பயன்படுத்துறவங்க கவனம்… இனி ஒவ்வொரு முறை பணம் எடுத்தாலும் கட்டணம்!

ஏடிஎம் பயன்படுத்துறவங்க கவனம்… இனி ஒவ்வொரு முறை பணம் எடுத்தாலும் கட்டணம்!

ஏப்ரல் 1 முதல், ஏடிஎம் பயன்பாட்டில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. யுபிஐ மூலம் பணம் எடுப்பதும் இலவச பரிவர்த்தனை வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளதால், இனி கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 27 2026, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஏப்ரல் 1 முதல் ATM விதிகள் மாற்றம்
Image Credit : Asianet News

ஏப்ரல் 1 முதல் ATM விதிகள் மாற்றம்

ஏப்ரல் 1 முதல் ஏடிஎம் பயன்பாட்டில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வங்கிகள் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதால், பணம் எடுக்கும் முறையிலும், கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. டெபிட் கார்டு மட்டும் அல்லாமல், யுபிஐ மற்றும் கியூ. ஆர் கோடு வழியாக பணம் எடுப்பவர்களும் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படுவார்கள்.

25
டெபிட் கார்டு பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு
Image Credit : Getty

டெபிட் கார்டு பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு

முக்கியமாக, சில வங்கிகள் யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதையும் இலவச பரிவர்த்தனை வரம்புக்குள் சேர்த்துள்ளன. அதாவது, மாதத்திற்கு இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை குறைந்து விடும். மெட்ரோ நகரங்களில் குறைந்த அளவு, பிற நகரங்களில் கொஞ்சம் அதிகமான இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த வரம்பை மீறினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

Related Articles

Related image1
இது வீட்டில் இருந்தா போதும்… இனி கேஸ் சிலிண்டர் வாங்கவே தேவையில்லை!
Related image2
மக்களுக்கு நிம்மதி.. பெட்ரோல், டீசல் குறையப்போகுதா? கலால் வரி ரூ.10 குறைத்த மத்திய அரசு!
35
டெபிட் கார்டு பயனாளர்கள்
Image Credit : Asianet News

டெபிட் கார்டு பயனாளர்கள்

டெபிட் கார்டு பயனாளர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில வங்கிகள் தினசரி பணம் எடுக்கும் வரம்பை குறைத்ததால், பெரிய தொகைகளை எடுக்க பல முறை முயற்சிக்க வேண்டும். இதனால் பரிவர்த்தனை எண்ணிக்கை அதிகரித்து, கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.

45
ஏடிஎம் பணமில்லாத பரிவர்த்தனை
Image Credit : Asianet News

ஏடிஎம் பணமில்லாத பரிவர்த்தனை

மேலும், ஏடிஎம்-ல் செய்யப்படும் பணமில்லாத பரிவர்த்தனைகளும் இப்போது இலவச வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. இலவச வரம்பைத் தாண்டியவுடன், பணம் எடுப்பதற்கும், பேலன்ஸ் பார்ப்பதற்கும் தனித்தனியாகக் கட்டணங்கள் விதிக்கப்படும். கணக்கில் போதுமான பணம் இல்லாததால் பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

55
ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு
Image Credit : Asianet News

ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

இந்த மாற்றங்கள் சிறியதாக தோன்றினாலும், அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்தும் மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். இதனால், பலர் யுபிஐ, நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறைகளை அதிகமாக பயன்படுத்த ஆரம்பிக்கலாம். எதிர்காலத்தில் ஏடிஎம் பயன்பாடு குறைந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம்
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திர பரிவர்த்தனை விதிகள்
தானியங்கி பண இயந்திர பரிவர்த்தனைக் கட்டணங்கள்
வங்கி
Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களுக்கு பெரிய குஷி.. 20%-35% சம்பள உயர்வு சாத்தியம்
Recommended image2
இந்த கேள்விய மட்டும் ChatGPT கிட்ட கேட்காதீங்க.! யாரும் சொல்லாத டெக்னிக்கல் சீக்ரெட் இதுதான்.!
Recommended image3
ரயில் டிக்கெட் கேன்சல்.! இப்படி பண்ணா ரீ ஃபண்ட் கிடைக்காது.! பொதுமக்கள் வயிற்றில் அடிக்கும் ரயில்வே.! ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்.!
Related Stories
Recommended image1
இது வீட்டில் இருந்தா போதும்… இனி கேஸ் சிலிண்டர் வாங்கவே தேவையில்லை!
Recommended image2
மக்களுக்கு நிம்மதி.. பெட்ரோல், டீசல் குறையப்போகுதா? கலால் வரி ரூ.10 குறைத்த மத்திய அரசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved