UPI முதல் ஓய்வூதியம் வரை - ஏப்ரல் 1 முதல் மாறும் 10 மாற்றங்கள்!
வருமான வரி, யுபிஐ, பான்-ஆதார் இணைப்பு, மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி உள்ளிட்ட பல துறைகளில் ஏப்ரல் 1, 2025 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் உங்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வருமான வரி
ஏப்ரல் 1, 2025 முதல் பிரிவு 87ஏ-ன் கீழ் வரி விலக்கு 25 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
UPI மூடப்படும்
கடந்த 12 மாதங்களாக பயன்படுத்தப்படாத யுபிஐ எண்கள் ஏப்ரல் முதல் மூடப்படும். மார்ச் 31 வரை செயலில் இருக்கும் எண்கள் மட்டுமே.
வங்கி கணக்கில் பராமரிப்பு செலவு
ஏப்ரல் 1 முதல் வங்கி கணக்கில் பராமரிப்பு செலவு கடுமையாக்கப்படுகிறது. குறைந்தபட்ச இருப்பு வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
பான்-ஆதார் இணைப்பு
மார்ச் 31-க்குள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் டிவிடெண்ட் கிடைக்காது. டிவிடெண்டில் டிடிஎஸ் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன்
ஏப்ரல் 1 முதல் கடன் விதிகளில் மாற்றம். நகரங்களில் 50 லட்சம் வரை, சிறிய நகரங்களில் 35 லட்சம் வரை கடன் பெறலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டிமேட் KYC
ஏப்ரல் 1, 2025 முதல் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டிமேட் KYC செய்யப்படும். இதன் கீழ் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்படும்.
TDS வரம்பு உயர்வு
ஏப்ரல் 1 முதல் TDS வரம்பு உயர்வு. மூத்த குடிமக்களுக்கு வட்டி வருமானத்தின் TDS வரம்பு 1 லட்சமாக உயரும்.
மொபைல் எண் புதுப்பித்தல்
ஏப்ரல் 1-க்கு முன் மொபைல் எண்ணை வங்கி கணக்குடன் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் யுபிஐ அணுகல் தடுக்கப்படலாம்.
செக் கிளியரன்ஸில் புதிய விதி
ஏப்ரல் 1 முதல் செக் கிளியரன்ஸில் புதிய விதி. 50 ஆயிரத்துக்கு மேல் செக் விவரங்களை மின்னணு முறையில் பகிர வேண்டும்.
ஓய்வூதிய விதி மாற்றம்
ஏப்ரல் 1 முதல் ஓய்வூதிய விதி மாற்றம். 25 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் கிடைக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.