MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மரம் வளர்ப்பிற்கான செயலிகள்: ஸ்மார்ட் போனில் பசுமைப் புரட்சி!

மரம் வளர்ப்பிற்கான செயலிகள்: ஸ்மார்ட் போனில் பசுமைப் புரட்சி!

தொட்டிகளில் மரம் வளர்த்து பசுமை புரட்சி செய்பவர்கள் மத்தியில், மரம் வளர்ப்பிற்கான செயலிகள் புதிய பாதையை திறக்கின்றன. லீப் ஸ்னாப், தமிழ்நாடு மரக்களஞ்சியம், ஃபார்ம் ட்ரீ போன்ற செயலிகள் மரம் வளர்ப்பு குறித்த அனைத்து தகவல்களையும் வழங்குகின்றன.

3 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 08 2025, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வன ஆர்வலர்களுக்கு உதவும் செயலிகள்
Image Credit : our own

வன ஆர்வலர்களுக்கு உதவும் செயலிகள்

கட்டிட காட்டுக்குள் வசிக்கும் நாம் தொட்டிகளில் மரம் வளர்த்து பசுமை புரட்சி செய்து வருகிறோம். தொட்டியில் பூக்கும் பூக்களையும் காய்க்கும் காய்களையும் புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைக்கும் பலரால் மழைக்காக ஒரு மரக்கன்றை கூட நட முடிவதில்லை. சுற்றுப்புறச்சூழலை பற்றி கவலைப்படாமல் வாகனங்களையும் பிளாஸ்டிக் பொருட்களையும் வாங்கி குவித்து வருவோர் மத்தியில் ஒருசிலர் மரநடுவிழா நடத்தி உலகத்தை காப்பாற்ற நினைக்கின்றனர். நெல், கரும்பு மற்றும் தானியங்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் கூட தங்கள் வயல் ஓரங்களில் மரத்தை நடுவதில்லை.

26
மரம் செய்ய விரும்பு
Image Credit : UNSPLUSH

மரம் செய்ய விரும்பு

இந்த நிலையில் மரம் வளர்க்க விரும்புவர்களுக்காக ஒருசில செயலிகள் உதவி செய்கின்றன. செல்போன் இல்லாதவர்களே இல்லை எனும் சூழல் தற்போது இருக்கும் நிலையில், இயற்கை ஆர்வலர்களுக்கு உதவும் வகையில் இந்த செயலிகள் உருகாக்கப்பட்டுள்ளன.இயற்கை ஆர்வலர்கள், நர்சரி கார்டன் வைத்துள்ளோர், வனத்துறையினர், மர வளர்ப்பு வல்லுநர்கள், அனுபவ விவசாயிகள் எனப் பலரும் மர வளர்ப்பைப் பற்றிச் சொல்வார்கள் என்றாலும், ஸ்மார்ட் போனிலேயே மரம் வளர்ப்பு குறித்த அனைத்துத் தகவல்களும் கிடைக்கின்றன. மரங்களை குறித்து தெரிந்துகொள்ள விரும்புவர்கள், மர வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைவரும் கீழ்கண்ட செயலியை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

Related Articles

Related image1
ஆயிரத்தில் முதலீடு கோடி ரூபாய் சேமிப்பு: எஸ்ஐபி (SIP) சூட்சமம்!
Related image2
மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பில் மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம்! ஈசியா தொடங்கலாம்!
36
லீப் ஸ்னாப் (Leaf Snap)
Image Credit : Google

லீப் ஸ்னாப் (Leaf Snap)

தெரியாத மரங்களின் விவரங்களை அப்படியே அள்ளிக்கொடுக்கிறது இந்த லீப் ஸ்னாப் செயலி. வாக்கிங் செல்லும் போது சாலையோரம் இருக்கும் மரம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஒரு புகைப்படம் எடுத்து அதனை இந்த ஆப்பில் அப்லோடு செய்யலாம். இதனை தொடர்ந்து அந்த மரம் மற்றும் தாவரத்தின் அத்தனை விவரங்களையும் புட்டு புட்டு வைக்கிறது இந்த லீப் ஸ்னாப் ஆப். மரத்தின் பெயர், அதன் தாவரவியல் பெயர்,மருத்துவ குணம், பூர்வீகம் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் அள்ளித்தரும் இந்த செயலி மரம் வளர்போருக்கும், விவசாயிகளுக்கும் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

46
தமிழ்நாடு மரக்களஞ்சியம் (Maram Tamil)
Image Credit : Getty

தமிழ்நாடு மரக்களஞ்சியம் (Maram Tamil)

பொதுமக்களிடையே மர வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கடந்த 2018-ல் அறிமுகமானது தான் 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்'. இதன் பெயரைப் போலவே மரங்கள் சார்ந்த அனைத்து விதமான தகவலையும் தன்னகத்தே தாங்கி நிற்கிறது இந்த செயலி.

நம்ம ஊர் விவசாயிகள் மற்றும் பாமரமக்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த செயலி மரம் வளர்ப்பு குறித்து அத்தனை தகவல்களையும் தமிழில் தருகிறது. மண் சார்ந்த மரம் எது? அது எந்த மண்ணில் வளரும்? எந்தச் சத்தை கொடுத்தால் சரளமாக வளரும்? என்பதை போன்ற பண்ணையம் சார்ந்த கேள்விக்களுக்கு இந்தச் செயலி முழுமையான தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டு, செயல்பாட்டிற்கும் வந்துள்ளது.

தமிழக மரங்கள், மாநில மரங்கள், உள்நாட்டு மரங்கள், வெளிநாட்டு மரங்கள் என எல்லாவற்றையும் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. அதேபோல் மரங்கள், மரங்களின் புகைப்படங்கள், மரங்கள் வளர்க்கும் முறை, விதைப்பந்து, மானியம், அரசு திட்டங்கள் குறித்த தகவல்களும் இதில் உள்ளதால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தெளிவான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால் மரங்கள் குறித்து புதிதாக தெரிந்துகொள்வோருக்கும் இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும். மரங்களை எந்த காலத்தில் வளர்க்கலாம், நடவு செய்யும் முறை, கவாத்து அவசியமா, கன்றுகளை எப்படி உருவாக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த ஆப்பில் இருக்கின்றன. கூகுள் ப்ளே ஸ்டோரில் மரம் தமிழ் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டால் கிடைக்கிறது இந்த அற்புதமான செயலி.

56
ஃபார்ம் ட்ரீ (Farm Tree)
Image Credit : our own

ஃபார்ம் ட்ரீ (Farm Tree)

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மத்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட செயலி இது. இதில் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யும் 22 மர வகைகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. 22 மர வகைகளின் தாவரவியல் பெயர்களோடு முகப்பில் இருக்கும். அவற்றில் தேவைப்படும் மரத்தின் தாவரவியல் பெயரை க்ளிக் செய்தால் அந்த மரத்தின் பயன்பாடுகள், சாகுபடி, கன்று உருவாக்கும் முறை, கிடைக்கும் மகசூலின் அளவு (ஹெக்டேரில்), மரப் பராமரிப்பு, மர வகையின் சிறப்புகள் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும். மூங்கில், சவுக்கு, தேக்கு, வேம்பு, கிளரிசீடியா, வாகை, தைல மரம், மலைவேம்பு, கடம்பு உள்ளிட்ட 22 மர வகைகள் உள்ளன. இதன் சேவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். மர வளர்ப்பில் எழும் சந்தேகங்களுக்கு நிபுணர்களைத் தொடர்புகொள்ளவும் வழிகாட்டுகிறது இந்தச் செயலி.

66
மரங்களுக்காக இத்தனை செயலிகளா?
Image Credit : our own

மரங்களுக்காக இத்தனை செயலிகளா?

Grow-Trees.com – இந்த செயலி மூலம் நீங்கள் மரங்களை இணையத்தில் நடக்கலாம் மற்றும் அவற்றின் வளர்ச்சியை கண்காணிக்கலாம்.

Forest by SeekrTech – வனத்தை  உருவாக்க உதவும் செயலி. நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஒரு மரம் வளர்ந்து காடாக மாறும்.

EcoMatcher – உலகின் பல பகுதிகளில் உண்மையான மரங்களை நடக்கலாம், மேலும் GPS மற்றும் புகைப்படங்களுடன் அவற்றின் வளர்ச்சியைப் பார்க்கலாம்.

Treeapp – நாள் தோறும் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, இலவசமாக ஒரு மரத்தை நடக்கலாம்.

Plant-for-the-Planet – இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயலி உலகளாவிய மரம் நடும் முயற்சிகளை கண்காணிக்க உதவுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆப்
வணிகம்
இந்தியா
சுற்றுச்சூழல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்! பிரதமர் மோடி பெருமிதம்!
Recommended image2
Business: ரூ.5,000 முதலீட்டில் ரூ.50,000 வரை சம்பாதிக்கும் சூப்பர் தொழில்.! பெண்களே களத்தில் இறங்கி கலக்கலாம் வாங்க.!
Recommended image3
Investment: வெள்ளி இருக்கும் போது தங்கம் எதுக்கு.! அள்ளி கொடுக்க போகும் வெள்ளியை இனி தள்ளி வைக்க வேண்டாம்.!
Related Stories
Recommended image1
ஆயிரத்தில் முதலீடு கோடி ரூபாய் சேமிப்பு: எஸ்ஐபி (SIP) சூட்சமம்!
Recommended image2
மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பில் மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம்! ஈசியா தொடங்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved