திடீரென பெரும் சரிவை சந்தித்த அம்பானி-அதானி; ரூ.52,000 கோடி நஷ்டம்; ஏன் என்னாச்சு?
உலகின் பெரும் பணக்கார தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ரூ.52,000 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அது குறித்து விரிவாக காண்ம்போம்.

Mukesh Ambani and Gautam Adani
HMPV வைரஸ்
சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது. லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. கொரொனாவுக்கு பிறகு உலகில் புதுப்புது வைரஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இப்போது சீனாவில் வேகமாக பரவி வரும் HMPV வைரஸ் எனப்படும் 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்'இந்தியாவிலும் நுழைந்து விட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளது. HMPV வைரஸால் மக்கள் பீதியில் இருக்கும் நிலையில், இந்த வைரஸ் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி போன்ற உலகின் மிகப் பெரிய பணக்காரர்களையும் பாதித்துள்ளது.
HMPV virus
அம்பானி-அதானி சொத்து மதிப்பு சரிவு
அதாவது HMPV வைரஸ் காரணமாக சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தொழில் முடங்கியதால் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகிய இருவருக்கும் ரூ.52,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் தரவுகளின்படி, ஆசியாவின் மிகப் பெரிய பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 2.59 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாகக் குறைந்துள்ளது.
வங்கியில் பணம் போட போறீங்களா? 60% வரி கட்டணுமாம்: நடைமுறைக்கு வந்த RBIயின் புதிய விதிமுறை
What is Ambani's Net Worth?
அம்பானி சொத்து மதிப்பு என்ன?
முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி நிறுவன பங்குகளும் சரிந்ததால் இருவரும் சொத்து மதிப்பில் சரிவை சந்தித்துள்ளனர். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் தரவுகளின்படி முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பில் 2.59 பில்லியன் டாலர்கள் (ரூ.22,000 கோடிக்கு மேல்) சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவரது மொத்த சொத்து மதிப்பு இப்போது 90.5 பில்லியன் டாலர்களாக உள்ளது.
2025 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் சில நாட்களுக்குள், அம்பானியின் நிகர மதிப்பு ஏற்கனவே 119 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. தற்போது, முகேஷ் அம்பானியின் உலகின் 17வது பணக்காரராக உள்ளார்.
What is Adanii's Net Worth?
அதானி சொத்து மதிப்பு என்ன?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 2% க்கும் அதிகமாக சரிந்ததே அம்பானியின் சொத்து மதிப்புக்கு காரணமாக அமைந்து விட்டது.ஆசியாவின் இரண்டாவது பணக்கார தொழிலதிபரும் உலகின் 19வது பணக்காரருமான கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் தரவுகளின்படி அவரது நிகர சொத்து மதிப்பு 3.53 பில்லியன் டாலர்கள் (ரூ.30,000 கோடிக்கு மேல்) குறைந்து, அவரது மொத்த சொத்து மதிப்பு $74.5 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.
குறிப்பாக 2025 ஆம் ஆண்டின் முதல் சில நாட்களுக்குள், அதானியின் சொத்து மதிப்பு ஏற்கனவே 4.21 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. HMPV வைரஸ் காரணமாக அதானி நிறுவன பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
ரூ.5 லட்சத்தை ரூ.15 லட்சமாக்கும் பொன்னான திட்டம்: முதலீட்டை 3 மடங்காக்கும் தபால் துறை திட்டம்