LIC Agents: முகவர்கள் அதிகபட்சம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் தெரியமா?
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation - LIC) 2024 நிதியாண்டில் ரூ. 40,676 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனால் நிறுவனத்தின் LIC முகவர்களின் சராசரி மாத வருமானம் கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது.
Life Insurance Corporation
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) இந்த நிதியாண்டு 2024க்கான முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் ரூ.40 ஆயிரத்து 676 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக எல் ஐ சி., நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் லாபம் 12% அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த லாபம் ரூ.36 ஆயிரத்து 397 கோடியாக இருந்தது. ஆனால் மறுபுறம், எல்ஐசி நிறுவனத்திற்கு நன்மைகளை வழங்கும் முகவரின் வாழ்க்கை அதலபாதாளத்தில் வீழ்கிறது. அவரது மாத வருமானம் அதிகபட்சமாக ரூ.20,446 மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Life Insurance Corporation
LIC முகவர் சம்பளம்
LIC முகவர்களின் சராசரி மாத வருமானம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அதிகம் என்றும் ஹிமாச்சல் பிரதேச LIC முகவர்களின் சராசரி மாத வருமானம் குறைவு என்றும் நிதி அமைச்சகத்திடம் LIC தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபரின் உள்ள முகவர்களுக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.20 ஆயிரத்து 446 சம்பளம் வழங்கப்படுகிறது. இங்கு, எல்ஐசியின் 273 முகவர்கள் மட்டுமே உள்ளனர். அதே நேரத்தில், ஹிமாச்சல பிரதேசத்தில் மிகக் குறைந்த சராசரி சம்பளம் வழங்கப்படுகிறது. அங்கு ரூ.10,338 வழங்கப்படுகிறது. இங்குள்ள எல்ஐசி முகவர்களின் எண்ணிக்கை 12,731 முகவர்கள்.
Life Insurance Corporation
LIC முகவர்களின் சம்பளம்
LIC வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாடு முழுவதும் எல்ஐசி முகவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 90 ஆயிரத்து 920 பேர் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான LIC முகவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ளனர். இங்கு சுமார் 1 லட்சத்து 84 ஆயிரம் LIC முகவர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் சராசரி சம்பளம் ரூ.11,887.
இதற்குப் பிறகு மகாராஷ்டிராவில் 1 லட்சத்து 61 ஆயிரம் எல்ஐசி முகவர்கள் உள்ளனர். இவர்களின் சராசரி வருமானம் ரூ.14,931. மேற்கு வங்கத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 975 பேர் உள்ளனர். இங்கு அவர்களின் சராசரி மாத வருமானம் ரூ.13,512 மட்டுமே
தமிழ்நாட்டு LIC முகவர்களின் சம்பளம்
தமிழகத்தில் 87,347 எல்ஐசி முகவர்கள் உள்ளனர், அவர்களின் மாத வருமானம் ரூ.13,444. கர்நாடகாவில் 81,674 எல்ஐசி முகவர்களின் சராசரி மாத வருமானம் ரூ.13,265 ஆகும். ராஜஸ்தானில் 75 ஆயிரத்து 310 முகவர்கள் உள்ளனர், அவர்களின் சராசரி மாத வருமானம் ரூ.13,960. மத்திய பிரதேசத்தில் 63 ஆயிரத்து 779 முகவர்கள் உள்ளனர். இவர்களின் சராசரி மாத வருமானம் ரூ.11,647 மட்டுமே.
எல்லாமே அதிகரிக்குது.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்.. 8வது சம்பள கமிஷன் முக்கிய அப்டேட்!