தவறான அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டீங்களா? திரும்பக் கிடைக்க உடனே இதைப் பண்ணுங்க!
பணம் அனுப்பும் விஷயத்தில், அனைவரும் கவனமாக இருக்க முயற்சி செய்கிறோம். ஒவ்வொரு விவரத்தையும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்ப்போம். ஆனால் சில நேரங்களில் தவறுகள் நடந்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிறிய பிழையால் பணம் வேறொருவரின் கணக்குக்குச் சென்றுவிடும். அந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்? பணத்தைத் திரும்பப் பெற என்ன வழி இருக்கிறது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Spelling error
பணம் அனுப்பும்போது பெறுநரின் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டை டைப் செய்ய வேண்டியிருக்கும். அதில் ஒரு சிறிய எழுத்துப்பிழை வந்துவிட்டால் அவ்வளவுதான். உங்கள் பணம் வேறொருவரின் கணக்கில் செலுத்தப்படும். ஒரு சிறு தவறு தேவையில்லாத சிரமங்களுக்கு வழிவகுக்கும்.
Rush payments
பணம் செலுத்தும் போது அவசரப்படுவதைத் தவிர்ப்பது முக்கியம். எங்கள் ஸ்மார்ட்போன்களில் டைப் செய்யும்போது சிறிய பிழை நேர்ந்தாலும் பெரிய இழப்பு ஏற்படக்கூடும். வேகத்தைக் குறைத்து, அனைத்து விவரங்களையும் இருமுறை சரிபார்க்கவும். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் பணத்தை இழக்காமல் இருக்கலாம்.
Payment failure
பணம் அனுப்பும்போது டைப் செய்யும் விவரங்கள் தவறானதாக இருந்தால், பரிவர்த்தனை தோல்வியடையும் வாய்ப்பும் உள்ளது. அப்போது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் செல்லாது.
Payment to wrong account
டைப் செய்த விவரங்கள் தவறாக இருந்தாலும், அது வேறு யாருடைய கணக்கின் சரியான விவரமாக இருந்தால், அவருக்கு நீங்கள் அனுப்பும் பணம் சென்றுவிடும். குறிப்பாக ஒரு பெரிய தொகையை அனுப்பும்போது இந்த மாதிரி நடந்தால், இது பெரிய தலைவலியாக மாறிவிடும்.
Contact customer care
தவறான அக்கவுண்டிற்குப் பணம் அனுப்பிவிட்டால், உடனே உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனை குறித்த அனைத்து விவரங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு டோக்கன் நம்பர் அல்லது புகார் எண்ணை வழங்குவார்கள். இது உங்கள் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையைத் தெரிந்துகொள்ள உதவும். எனவே இதை பத்திரமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
போனில் புகார் அளித்த பிறகு, அனைத்து விவரங்களுடன் வாடிக்கையாளர் சேவைக்கு ஒரு மின்னஞ்சல் எழுதவும். இதன் மூலம் நீங்கள் அளித்த புகார் குறித்த ஆவணப் பதிவை ஏற்படுத்தலாம். உள்ளூர் வங்கிக் கிளைக்குச் சென்று, மேலாளரைச் சந்தித்து நடத்தி முறையான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். வங்கிக்கு நேரில் சென்று புகார் கொடுப்பதற்கு அதிக பலன் கிடைக்கலாம்.
Reverse a Bank Transfer
டைப் செய்த தவறான எண்ணில் ஒரு வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தால் அல்லது பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்குத் தானாகவே வந்துவிடும். செயல்பாட்டில் உள்ள வேறொருவரின் அக்கவுண்டாக இருந்தால், அவரது கணக்கிற்குச் சென்ற பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு அந்த நபரின் ஒத்துழைப்பு தேவைப்படும்.
How your bank can help you?
தவறுதலாக அனுப்பப்பட்ட வஙகிக் கணக்கும் உங்கள் வங்கியிலேயே இருந்தால், வங்கி சார்பில் சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு பணத்தைத் திருப்பி அளிக்கக் கோருவார்கள். வேறு வங்கியில் உள்ள கணக்கு என்றால், உங்கள் வங்கி அந்த தவறான பெறுநரின் வங்கி விவரங்களைப் பெற்று உங்களுக்கு வழங்கும். நீங்கள் தனிப்பட்ட முறையில் அந்த நபரிடம் தொடர்புகொண்டு பணத்தைத் திருப்பி அனுப்பக் கோரலாம். பரிவர்த்தனை தொடர்பான எல்லா ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
How to avoid Wrong Transfers
தவறு நேராமல் இருக்க பணம் அனுப்பவதற்கு முன் விவரங்களை நன்று சரிபார்க்கவும். குறிப்பாக, பெறுநரின் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டைச் சரிபார்க்கவும்.
முதலில் ஒரு சிறிய தொகையை அனுப்பி சோதனை செய்யவும். இந்த வழியில், பணம் சரியாக பெறுநருக்குச் செல்கிறதா என்பதைச் சரிபார்க்கலாம். அவர் தொகை கிடைத்துவிட்டது என உறுதி செய்தால், நம்பிக்கையுடன் மீதியை பணத்தை அனுப்பலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ரூ. 10,000 அனுப்ப வேண்டும் என்றால், 10 ரூபாய் முதலில் அனுப்பவும். அது கிடைத்துவிட்டது என உறுதியானதும், முழுத் தொகையையும் அனுப்பவும்.
ஆன்லைன் பேமெண்ட் வசதியை பயன்படுத்தும்போது, சரியான விவரங்களை டைப் செய்வது உங்கள் பொறுப்பு. எனவே, பணம் அனுப்புவதற்கு சில கூடுதல் நிமிடங்கள் கூடுதலாகச் செலவானாலும் பரவாயில்லை. பொறுமையாக அனைத்தையும் சரிபாருங்கள். குறிப்பாக பெரிய தொகையை அனுப்பும்போது இது மிகவும் முக்கியமானது. எச்சரிக்கை இருந்தால் பணத்தை இழக்கும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.