- Home
- Business
- Side Business: மாதம் ரூ.50,000 வரை சுளையாய் கிடைக்கும்! தெரிஞ்சு கிட்டா நீங்க லட்சாதிபதி!
Side Business: மாதம் ரூ.50,000 வரை சுளையாய் கிடைக்கும்! தெரிஞ்சு கிட்டா நீங்க லட்சாதிபதி!
இளமையில் கூடுதல் வருமானம் ஈட்டினால் முதுமையில் நிம்மதி. பகுதி நேர வேலைகள் மூலம் மாதம் 10 முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

நிம்மதியான வாழ்க்கைக்கு கூடுதல் வருமானம்
இளமை காலத்தில் கூடுதலாக சம்பாதித்தால் முதுமையில் நிம்மதியாக இருக்கலாம். நடுதட்டு மக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைத்தால் கூட அது மிகப்பெரி நிம்மதியை கொடுக்கும். இந்த நிலையில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் பணியுடன் கொஞ்சம் கூடுதலாக உழைத்தால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.உங்கள் திறமை, ஆர்வம், அனுபவம் இவற்றை தாண்டி, ஒவ்வொருவருக்கும் ஏற்ற சைடு பிசினஸ் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
ப்ரீலான்ஸ் வாய்ப்புகள்
தகவல் தொழில்நுட்பத்தில் அல்லது கிராஃபிக்ஸ் டிசைனிங் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் ஃப்ரீலான்ஸ் சேவைகளை ஆரம்பித்து இணையம் வழியாக லோகோ டிசைன், கண்டென்ட் ரைட்டிங், வலைத்தள மேன்டனன்ஸ் ஆகியவற்றில் சம்பாதிக்க முடியும். நேரத்தை கட்டுப்படுத்தி, உங்களது திறமையை வருமானமாக மாற்ற முடியும் என்பதே இந்த பிசினஸின் சிறப்பு.முதலில் தெரிந்தவர்களின் திருமணங்களுக்கு பிளெக்ஸ் போன்றவற்றை டிசைன் செய்து கொடுக்கலாம்.தொடர்ந்து வாய்ப்புகள் வரும் போது இதன் மூலம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். இதற்கு நீங்கள் தினமும் 2 மணி நேரம் கூடுதலாக உழைத்தாலே போதுமானது.
அறிவை விற்பனை செய்யும் ஆன்லைன் கோர்ஸ் & பயிற்சிகள்
ஆசிரியர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் அனுபவம் உள்ளோர் ஆன்லைன் கோர்ஸ்களை உருவாக்கி Udemy, YouTube போன்ற தளங்களில் விற்பனை செய்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்கள். வெறும் அனுபவத்தையே தங்களது வருமானமாக மாற்றும் இந்த வாய்ப்பு, நேர்த்தியுடன் திட்டமிடுபவர்களுக்கு வெற்றி தரும். நமக்கு கிடைக்கும் ஓவ்வு நேரத்தில் நாம் ஆன்லைனில் பாடம் நடத்தினாலே போதும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் நமக்கு தெரிந்ததை சொல்லி கொடுத்தால் நல்ல வருமானத்தை ஈட்டமுடியும்.
இன்ஸ்டாகிராம்/Facebook பிசினஸ்
வீடிலிருந்து வேலை செய்பவர்கள், பெண்கள் போன்றோர் இன்ஸ்டாகிராம் மற்றும் Facebook பக்கங்கள் மூலம் ஹேண்ட்மேட் ஜுவல்லரி, டெக்கர் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார்கள். சிறிய முதலீட்டில், சமூக ஊடகத்தை சரியாக பயன்படுத்தினால், பெரும் வணிக வளர்ச்சி சாத்தியமாகிறது.மொத்தவிலையில் கிடைக்கும் பொருட்களை வாங்கி அதனை அழாக பேக்கிங் செய்து ஆன்லைனில் விற்பனை செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். கொஞ்சம் கிரியேட்டிவிட்டி இருந்தால் கடைகளில் வாங்கி வரும் பொருட்களை கலர் மற்றும் பேக்கிங்கை மாற்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம். நாம் கொடுக்கும் பொருள் தரமாக இருக்கும் பட்சத்தில் ஆர்டர் குவியும்
பிளாகிங் & YouTube : உங்கள் குரல், உங்கள் வருமானம்
எழுதும் திறமை கொண்டவர்கள் தங்களது சொந்த பிளாக் அல்லது YouTube சேனல் மூலம் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்து மக்களின் நம்பிக்கையை ஈர்த்து வருமானத்தைத் திரட்டுகிறார்கள். உங்கள் குரலை பலருக்காக மாற்றும் இந்த வாய்ப்பு, தனித்துவத்தை கொண்டவர்களுக்கு தங்கக் கிணறு. முதலீடே இல்லாமல் தொடங்கும் இந்த தொழில் குறைந்தது 15 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாயும் வருமானத்தை கொடுக்கும்.
ஹோம் ஃபுட் பிசினஸ்
உணவு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் வீட்டிலிருந்து லஞ்ச் பாக்ஸ் சேவையை ஆரம்பித்து சின்ன முதலீட்டில் பெரிய வெற்றியை கண்டுள்ளனர். சுவையான உணவு எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். இதை வருமானமாக மாற்றுவதில் வெற்றி வாய்ப்பு அதிகம்.
வெற்றியை சந்திக்க தயங்க வேண்டாம்
நீங்கள் செய்யும் சிறிய முயற்சி நாளைய நிலையான வருமானத்தின் முதல் கட்டையாக அமையும். ஒரு மணி நேரம் கூட தள்ளி வைக்காமல், தன்னம்பிக்கையுடன் ஒரு சின்ன முயற்சியை இன்று தொடங்குங்கள். உங்கள் திறமை, நேர்மை, ஊக்கத்தை கொண்டு, வெற்றி நிச்சயம் உங்கள் பாதையில் வந்து சேரும். “நான் முயற்சி செய்தேன், வெற்றி கண்டேன்” என்று பெருமையுடன் சொல்வதற்கான நாள் இனி அதிக தூரத்தில் இல்லை!