மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஜனவரி மாதம் உயரப்போகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்!
8-வது ஊதியக் குழு அமைக்கப்படுமா? சமீபத்திய நிகழ்வுகள் புதிய ஊதியக் குழு சாத்தியம் பற்றிய புதிய வதந்திகளை கிளப்பி உள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

8th Pay Commission Latest Update
8-வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு புதிய சம்பள கமிஷன் அமைப்பது குறித்த ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.. இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகள் புதிய சம்பள கமிஷன் சாத்தியம் பற்றிய புதிய வதந்திகளை கிளப்பி உள்ளது..
8th Pay Commission Latest Update
லோக்சபாவில் மூன்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், புதிய ஊதியக் குழுவை அமைப்பதில் தாமதம் செய்வது குறித்து சமீபத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினர். 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், புதிய ஊதியக் குழுவின் அவசியத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
8th Pay Commission Latest Update
காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெய் பிரகாஷ், வெ. வைத்திலிங்கம் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆனந்த் பதாரியா ஆகியோர், புதிய சம்பள கமிஷன் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், அரசு ஊழியர்களின் அதிருப்தி குறித்து அரசுக்கு தெரியுமா எனறும் நிதி அமைச்சகத்திடம் கேட்டனர். 8வது ஊதியக்குழு அமைக்காத மத்திய அரசு மீது ஊழியர்களிடையே உள்ள அதிருப்தியை அரசாங்கம் அறிந்திருக்கிறதா? அதற்கு அரசின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பினர்.
Central Govt Employees Salary
8வது சம்பள கமிஷன்: சமீபத்திய அப்டேட்
கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் தேசிய கவுன்சில் (NC-JCM) புதிய மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதை விரைவுபடுத்துமாறு மத்திய அமைச்சரவை செயலாளரை வலியுறுத்தியுள்ளது, மேலும் தாமதத்தைத் தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், NC-JCM இன் ஊழியர்கள் தரப்பு செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா தனது சமீபத்திய அறிக்கையில், “ஊதியங்களைத் திருத்துவதற்கு 8வது ஊதியக் குழுவே சிறந்த வழி என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால், , அரசாங்கம் வேறொரு (பொறிமுறையை) கொண்டு வரலாம். ” என்று தெரிவித்தார்.
8th Pay Commssion
மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?
8-வது ஊதிய குழுவானது குறைந்தபட்சம் 2.8" என்ற ஃபிட்மென்ட் காரணியைக் கருத்தில் கொள்ளலாம் என்று மிஸ்ரா முன்பு குறிப்பிட்டார். முன்மொழியப்பட்ட ஃபிட்மென்ட் காரணிக்கு அரசு ஒப்புதல் அளித்தால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186% அதிகரித்து, ரூ.18,000ல் இருந்து ரூ.51,480 ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அதிகரிப்புடன், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக உயரும்.
Govt Employees Salary
புதிய ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதால், நிதி அமைச்சகத்தின் அறிக்கை தெளிவை மட்டுமல்ல, ஏமாற்றத்தையும் அளித்தது. இருப்பினும், சமீபத்திய முன்னேற்றங்கள் 8வது ஊதியக் குழுவின் வரவிருக்கும் அறிவிப்பு பற்றிய புதிய உற்சாகத்தையும் ஊகத்தையும் உருவாக்கியுள்ளன. ஆனால் இந்த தகவல் எந்தளவு உண்மை என்ன பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.