- Home
- Business
- Salary Hike For Govt Employees: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? 8வது சம்பள கமிஷன் குறித்து வெளியான முக்கிய அப்டேட்
Salary Hike For Govt Employees: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? 8வது சம்பள கமிஷன் குறித்து வெளியான முக்கிய அப்டேட்
Salary Hike For Govt Employees: 8வது சம்பள கமிஷன் குறித்து மத்திய அரசு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், கமிஷனின் அறிக்கை, சம்பள உயர்வு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

8வது சம்பள கமிஷன் குறித்து அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 8வது சம்பள கமிஷன் குறித்து மத்திய அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்த கமிஷன் தனது இறுதி அறிக்கையை மே 3, 2027-க்குள் சமர்ப்பிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சம்பள உயர்வு எப்போது?
8வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதலே அமலுக்கு வரும். அறிக்கை சமர்ப்பித்து, அரசு ஒப்புதல் அளிக்க சில மாதங்கள் ஆகும் என்பதால், ஊழியர்களுக்கு சுமார் 16 முதல் 18 மாதங்கள் வரையிலான நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் கேஸ் சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்.! இதோ 6 புதிய அப்டேட்ஸ்.!
7வது சம்பள கமிஷனில் என்ன நடந்தது?
கடந்த 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டன. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அப்போது ஏழு மாத நிலுவைத் தொகையை அரசு வழங்கியது.
ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து அரசு விளக்கம்
ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மென்ட் ஃபேக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என சங்கங்கள் கோருகின்றன. ஆனால், இதுகுறித்து கமிஷன்தான் தன்னிச்சையாக முடிவெடுக்கும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அரசு ஊழியர் சங்கங்கள்
8வது சம்பள கமிஷன் தற்போது ஊழியர் சங்கங்கள் மற்றும் துறைகளிடமிருந்து கருத்துக்களைச் சேகரித்து வருகிறது. இதற்காக டெல்லி, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான காலக்கெடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

