கூகுள் பே-யில் யாருக்கும் தெரியாத 5 அம்சங்கள் – உங்களுக்கு தெரியுமா?
கூகுள் பே (GPay) பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்ல, பல பயனுள்ள அம்சங்களையும் கொண்டுள்ளது. சிலருக்கு இந்த அம்சங்கள் பற்றில் தெரியவில்லை. இதனைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

கூகுள் பே அம்சங்கள்
பணம் அனுப்பவும், பெறவும் நம்மில் பலரும் கூகுள் பே (GPay)-ஐ மட்டும் பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் சிலர் கூட தெரியாமல் இருக்கும் பல அசத்தலான அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்த பிறகு நீங்கள் கூட ஏன் இதுவரை நமக்கு தெரியலன்னு நினைப்பீர்கள்.
கூகுள் பே
இதில் முதலாவது அம்சம் தானியங்கு எனப்படும் ஆட்டோமேட்டிக் கட்டணம். நெட்ஃபிளிக்ஸ், ஸ்பாட்டிஃபை, யூடியூப் பிரீமியம், ஜியோ சினிமா மாதிரி சந்தா அடிப்படையிலான ஆப்ஸ்களுக்கு, ஒவ்வொரு மாதமும் தனியாக பணம் செலுத்துங்கள் வேண்டிய அவசியமே இல்லை. GPay-யில் Auto Pay செட்டிங் போட்டுட்டா, உங்கள் சப்ஸ்கிரிப்ஷன் பணம் தானாகவே கட்டப்பட்டுவிடும். இந்த வசதி உங்கள் ப்ரொஃபைல் பிக்சரில் சென்று பயன்பாடுகளை நிர்வகி என்பதைத் தேர்வு செய்தால் கிடைக்கும்.
கூகுள் பே டிப்ஸ்
இரண்டாவது குறிப்பு எடுப்பது ஆகும். யாருக்காவது பணம் அனுப்பும்போது அந்த டிரான்ஸாக்ஷனில் ஒரு சிறிய குறிப்பு எழுதிக்கொள்ளலாம். “வீட்டு வாடகை”, “சாப்பாட்டு பில்” மாதிரி குறிப்பு போட்டுட்டா, பிறகு பார்த்தால் அந்த பணம் எதற்காக அனுப்பினோம் என்று எளிதாக நினைவில் வைக்கலாம். இது ரொம்ப சின்ன ஆனால் பயனுள்ள டிரிக் ஆகும்.
பில்கள்
மூன்றாவது அம்சம் பில்லை பகிர்ந்து கொள்வது. நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு வெளியே சென்று சாப்பிட்ட பிறகு யார் எவ்வளவு கட்டணும் என்று சண்டை இல்லாமல், GPay-யில் பில் ஸ்பிளிட் பண்ணிடலாம். புதிய கட்டணம் - புதிய குழு சென்று குழுவை உருவாக்கி, தொகையைப் போட்டு, யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை சிஸ்டம் தானாகவே கணக்கிடும். இது ரொம்ப ஈஸி ஆகும்.
பேலன்ஸ் சரிபார்ப்பு
நான்காவது இருப்புச் சரிபார்ப்பு ஆகும். உங்கள் வங்கி அக்கவுண்டின் பேலன்ஸ் எத்தனை என்று தெரிய வேண்டியிருந்தால் தனியாக வங்கி ஆப்ஸ் திறக்கவேண்டிய அவசியம் இல்லை. GPay-யிலேயே கட்டண முறைகள் சென்று, உங்கள் வங்கியைத் தேர்வு செய்து, UPI PIN போட்டால் உடனடியாக பாலன்ஸ் தெரிய வரும்.
கூகுள் பே ரிவார்ட்ஸ்
ஐந்தாவது ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக். மின்சாரம் பில், மொபைல் ரீசார்ஜ் மாதிரி சில பரிவர்த்தனைகளுக்கு GPay உங்களுக்கு ஸ்க்ராட்ச் கார்டுகள் தரும். அதுல சில சமயம் காசு கேஷ்பேக் கிடைக்கும், சில சமயம் பிரபல பிராண்ட்ஸ் ஆஃபர் கூப்பன்ஸ் வரும். இவை எல்லாம் Rewards Section-ல கிடைக்கும். சரியான பரிவர்த்தனைகளில் இதை பயன்படுத்தினால் நல்ல சலுகைகள் கிடைக்கும்.