மாதம் ரூ.5000 கூடுதல் வருமானம் சம்பாதிக்க 5 சிறந்த வழிகள்!
உங்கள் வழக்கமான வருமானத்துக்கு மேல், கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புகிறார்களா? ஒவ்வொரு மாதமும் ரூ.5000 கூடுதலாக சம்பாதிக்க பெரிய முதலீடு செய்து, அதிக ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை. சில புத்திசாலித்தனமான சிறிய முதலீடுகள் செய்தால் போதும்

தொடர் வைப்பு நிதி
தொடர் வைப்பு நிதி (Recurring Deposit)
தொடர் வைப்பு நிதி எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் (RD) மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். மாதம் 1000-2000 ரூபாய் சேமித்து வங்கியில் RD தொடங்குங்கள். இதற்கு ஆண்டுக்கு 6-7% வட்டி கிடைக்கும். 1 வருடம் கழித்து உங்களுக்கு ஒரு கணிசமான தொகை கூடுதலாகக் கிடைக்கும். அதை முதலீடு செய்து பெருக்கலாம்.
டிஜிட்டல் தங்கம்
டிஜிட்டல் தங்கம் (Digital Gold)
இப்போதெல்லாம் டிஜிட்டல் தங்கத்தில் வெறும் 100 ரூபாயில் முதலீடு செய்யலாம். அட்சய திருதியை போன்ற பண்டிகைகளில் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். மாதம் 5,000 ரூபாய் வரை எளிதில் ஈட்டலாம். இது உங்கள் முதலீட்டைப் பொறுத்தது.
மியூச்சுவல் ஃபண்டு
மியூச்சுவல் ஃபண்டு (Mutual Funds)
மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் 500 ரூபாயில் இருந்து SIP முதலீட்டைத் தொடங்குங்கள். ஈக்விட்டி ஃபண்டுகளில் ஆண்டுக்கு 10-12% வரை வருமானம் கிடைக்கும். 3 முதல் 5 ஆண்டுகளில் 5,000 ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
உள்ளூர் தொழில்
உள்ளூர் தொழில் (Local Business)
உங்களுக்குத் தெரிந்த உள்ளூர் தொழிலில் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யுங்கள். லாபத்தில் பங்கு மூலம் மாத வருமானம் கிடைக்கும். அதிக பணம் முதலீடு செய்யும்போது அதிக வருமானம் ஈட்டலாம். இது குறைந்த ஆபத்துடையது.
கடன் வழங்குதல்
கடன் வட்டி மூலம் வருவாய் (P2P Loan)
RBI அங்கீகரித்த Peer-to-Peer (P2P) கடன் மூலம் பிறருக்கு கடன் கொடுத்து, அதற்கான வட்டி மூலம் சம்பாதிக்கலாம். இதில் ஆண்டுக்கு 9-12% வரை வட்டி கிடைக்கும். இதுவும் அதிக ஆபத்து இல்லாதது. சரியான தளத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது அவசியம்.
கவனிக்கவேண்டியவை
முதலீட்டுக்கு முன் (Before Investment)
எப்போதும் முதலீடு செய்வதற்கு முன் அது குறித்த விவரங்களை ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள். சிறிய முதலீடுகளை ஒழுக்கத்துடன் செய்யுங்கள். நீண்ட கால அடிப்படையில், ரூ.5000 நிலையான வருமானம் கிடைக்கும். முதலீடுக்கு முன் நிபுணரின் ஆலோசனையையும் கேளுங்கள்.